கண் நோய்களைப் போக்க இந்தப் பழத்தைச் சாப்பிடுங்கள்…

First Published Jan 5, 2017, 1:28 PM IST
Highlights


கொவ்வைப் பழங்கள் பெரும்பாலும் நீர் உள்ள சதுப்புநிலங்கள் மற்றும் வேலிகளின் மீது ஒட்டிக் கொண்டு கொடியாக வளரும் அழகான சிவப்புநிற பழங்களையும் வெண்மைநிற பூக்களையும் கொண்டிருக்கும்.  இந்த பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்புச்சுவையுடையதாக இருக்கும்.

இந்த கோவைக் காய்கள், தண்டுகள், கிழங்குகள் என்று அனைத்தும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

கண்நோய்களை இந்த கோவை நீக்குகின்றது. கண்களுக்கு குளிர்ச்சியை அள்ளித் தரக் கூடியது.  

கோவை இலைகளை பறித்து நிழலில் காயவைத்து பொடியாக்கி பின் அவற்றை ஒரு தேக்கரண்டி பொடியை எடுத்து சாப்பிட்டு வர கண் நோய்கள் குணமாகிவிடும்.

கோவை இலையை அரைத்து கஷாயம் தயாரித்து கொதிக்க வைத்து பின் குடித்து வர உடலில் வெப்பநிலை சீராகிவிடும். வெப்பத்தால் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும். வியர்க்குரு, கொப்புளங்கள், புண்கள் ஆகியவை நீங்கிவிடும்.

தாதுப் பிரச்சினைகள் தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.

click me!