உடலை வருத்திக் கொள்ளாமல் எடையை எளிதாக குறைக்கலாம்...இப்படி?

First Published Apr 16, 2018, 1:36 PM IST
Highlights
Easily reduce weight without worrying the body ... like this?


உடல் எடையை குறைக்க இந்த வழிகள் உதவு...

சில அன்றாட செயல்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்தாலே உடல் எடையை குறைக்க முடியும். 

அப்படி என்ன மாற்றங்கள்..

1... கீழே உட்கார்ந்து உண்ணும் பழக்கம்

மேசையில் அமர்ந்து உண்பது, நின்றப்படியே உண்பது போன்றவற்றை தவிர்த்து, தரையில் அமர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், அதிகமான அளவு உணவு உண்ணும் முறை குறையும். மேலும், நீங்கள் அளவுக்கு மீறி சாப்பிடும் போது, வயிற்றில் ஏற்படும் அழுத்தம், உங்களுக்கு எச்சரிக்கை மணியாக அடிக்கும். இதனால் உடல் எடை குறைக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

2.. சிறிய தட்டு

சிறிதளவு உணவுண்ணும் பழக்கத்தை கடைப்பிடிக்க, சிறிய தட்டுகளை பயன்படுத்துங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். க்ரோனிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த முறையை பயன்படுத்துவதால் 4 – 5 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடியும் என கூறுகிறார்கள்.

3.. பதினாறு அவுன்ஸ் நீர்

உணவருந்துவதற்கு அரை மணிநேரம் முன்பு 16 அவுன்ஸ் நீர் பருகுவதால் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். இது உணவருந்தும் வேளையில் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்க்க பயனைளிக்கிறது.

4.. ஏழு மணிநேர உறக்கம்

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஓர் ஆய்வில் 7 மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் நபர்களுக்கு உடல் எடை பரவலாக அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. நன்கு உறங்கும் நபர்களுக்கு 20% அதிகமாக கலோரிகள் உடலில் கரைக்கப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

5.. மொபைல் விளையாட்டு

தற்போதைய காலக்கட்டத்தில் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது மொபைல் விளையாட்டுகளும் கூட. உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் கேண்டி க்ரஷ், கிளாஸ் ஆப் கிளான்ஸ் போன்ற பல செயிலி விளையாட்டுகளை விளையாடும் முறையும் உங்கள் உடல் வேலைகளை குறைத்து ஒரே இடத்தில் மந்தமாக உட்கார செய்துவிடுகிறது. எனவே, முடிந்த வரை இதைவிட்டு வெளியே வர முயலுங்கள்.

6.. லிப்ட் வேண்டாம்

அவசர நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் லிப்ட்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள். இது உடலில் கலோரிகள் கொழுப்பாக மாறாமல், கரைக்க உதவும்.

7.. மாற்று உணவுகள்

இடைவேளை நேரங்களில் நொறுக்குத் தீனி, பாஸ்ட் புட் போன்றவற்றை உண்பதற்கு பதிலாக, நட்ஸ், உலர் திராட்சை போன்ற ஆரோக்கிய உணவுகளை சாப்பிடலாம்.

click me!