மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்கப் போகிறீர்களா…செல்போன் எடுத்துச் செல்ல வேண்டாம்…ஏன்?

First Published Jan 6, 2017, 12:02 PM IST
Highlights


மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்கப் போகிறீர்களா…செல்போன் எடுத்துச் செல்ல வேண்டாம்…ஏன்?

மருத்துவமனையில் நோயாளிகள் இருக்‍கும் அறைக்‍குள், செல்போன் எடுத்துச் செல்ல வேண்டாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்‍கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், நோய்களை பரப்பக்‍கூடிய பாக்‍டீரியாக்‍களும், வைரஸ்களும் செல்போனில் அதிக அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

செல்போன்களில் இருக்‍கும் பாக்‍டீரியா மற்றும் வைரஸ்கள், Anti-biotic மருந்துகளின் மீது கிருமியை உருவாக்‍கும் திறன் உடையவை என்பதால், அவை நோயாளிகளை கடுமையாக பாதிக்‍கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

திருப்பதியில் நடந்த அறிவியல் மாநாட்டில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவு வெளியிடப்பட்டன.

மருத்துவமனையில் டாக்‍டர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் செல்போன் கீபோர்டுகளில் இருந்து மட்டும் ஏறக்‍குறைய 100 பாக்‍டீரியா குழுக்‍களின் மாதிரிகள் ஆய்வில் எடுக்‍கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

முறையாக கைகளை சுத்தம் செய்யாமல் செல்போன் பயன்படுத்தும்போது, கைகள் மற்றும் செல்போனில் உள்ள பாக்‍டீரியாக்‍கள் இணைந்து நோய் கிருமிகளை பரப்புகின்றன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

click me!