சாப்பிட்ட பின் ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது. ஏன்?...

First Published Oct 7, 2016, 5:37 AM IST
Highlights


சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.

ஜில்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.

இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

ஜில் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜில் தண்ணீரை எடுக்ககூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

click me!