குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கிறதா? இதோ அதற்கான தீர்வு…

First Published Nov 7, 2017, 2:36 PM IST
Highlights
Does the baby have immunity? Here is the solution ...


குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷமும் சளித் தொந்தரவும் ஏற்படுகிறது.

இதற்கு மருத்துவமனை செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. இதோ வீட்டு வைத்தியத்திலேயே இதற்கு வழி இருக்கிறது.

** அரை இன்ச் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் கப் ஆக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரை டீஸ்பூன் வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளி, ஜலதோஷம், தலைவலி என எந்தப் பிரச்னையும் நெருங்காது.

சிலர் கசப்பான பொருட்களை நாக்கில் படாமல் அப்படியே முழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள்.

இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும். அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

அறுசுவைகளையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.

click me!