முட்டை சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்குமா?

By Asianet Tamil  |  First Published Feb 9, 2023, 8:57 PM IST

ஒரு முட்டையில் சுமார் ஆறு கிராம் புரதம் உள்ளது. உங்கள் எடை 60 கிலோவாக இருந்தால், உங்களுக்கு 40-60 கிராம் புரதம் தேவை. அதனால் முட்டை சாப்பிடுவதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
 


முட்டை பலரின் விருப்பமான உணவாகும். ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற பயத்தில் பலர் முட்டையை தவிர்க்கின்றனர். முட்டை சாப்பிடுவது உண்மையில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்குமா? பாஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 70 வயதுக்கு மேற்பட்ட 2,300 பேரிடம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.

முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுவது குறைந்த இரத்த அழுத்தம், குறைந்த இரத்த சர்க்கரை மற்றும் வகை 2 நீரிழிவு நோயின் குறைந்த ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடையது. முட்டை சாப்பிடுவது உண்மையில் இருதய நலனுக்கான அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

தற்போது, ​​அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதய ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக ஒரு நாளைக்கு ஒரு முழு முட்டை அல்லது இரண்டு முட்டைகளை சாப்பிடச் சொல்லி பரிந்துரைக்கிறது. முட்டையில் உள்ள உணவுப் புரதங்கள் இயற்கையான இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

காலையில் அரிசிச் சோறு சாப்பிடுபவரா நீங்கள்..?? அப்போ இதப்படிங்க மொதல்ல..!!

ஏ.சி.இ என்கிற ஆஞ்சியோடென்சின்-மாற்றும் என்சைம் தடுப்பான்கள் இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்கும் கலவைகள் ஆகும்.புரதம் செரிமானத்தை மெதுவாக்குவது மட்டுமல்லாமல், குளுக்கோஸ் உறிஞ்சுதலையும் குறைக்கிறது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு பெரிய முட்டை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை 4.4 சதவீதம் குறைக்கும்

முட்டை நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது என்று பாட்டியா மருத்துவமனையின் ஆய்வுகள் கூறுகின்றன.

click me!