உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர காரணம் "பால்" தானாம்...

Asianet News Tamil  
Published : May 03, 2018, 02:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர காரணம் "பால்" தானாம்...

சுருக்கம்

Do you know Women getting breast cancer because of milk

 

பெண்களை தாக்கும் பல்வேறு நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. இதனால், பல பெண்கள் அவஸ்தைபட்டு வருகின்றனர். 

இப்படி மார்பக புற்றுநோய் பலரையும் தாக்குவதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் தான்.

ஆம்...

சமீபத்திய ஆய்வு ஒன்றில் நாம் தினமும் குடிக்கும் பால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

எப்படி? 

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய்களில் அமைதியாகத் தாக்கிக் கொண்டிருக்கும் ஒரு வகை தான் மார்பக புற்றுநோய். இப்படி மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக மருத்துவ நிபுணர்கள், நாம் தினமும் குடித்துக் கொண்டிருக்கும் பால் தான் என நம்புகின்றனர்.

சமீபத்தில் நார்வே ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தினமும் 1 அல்லது 1/2 கப் பாலைக் குடிப்பவர்களை விட, 3 கப் பாலைக் குடிப்பவர்களுக்கு, 3 மடங்கு அதிகமாக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.

சமீபத்திய புள்ளி விவரத்தின் படி, உலகில் மார்பக புற்றுநோயால் பின்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளில் வாழ்பவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

உலகிலேயே இந்த நாடுகளில் மார்பக புற்றுநோய் அதிகம் வருவதற்கு காரணம், அங்கு பால் உற்பத்தியும், அதைப் பருகுவோரின் எண்ணிக்கையும் அதிகம் இருப்பது தான் காரணம்.

பாலில் உள்ள ஹார்மோன்களும், குறிப்பிட்ட உட்பொருட்களும் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. மேலும் இத்தகைய பாலில் சுத்திகரிக்கப்பட்ட வைட்டமின் டி சத்துக்கள் சேர்க்கப்படுகிறது. 

மருத்துவ நிபுணர்களும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களது உடலை சோதித்ததில், சிந்தடிக் வைட்டமின் டி இருமடங்கு அதிகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு மோசமான டயட், காய்கறிகள், மீன் போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் காரணங்களாகும்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!