இனி கருவளையத்தை மேக்கப் போட்டு மறைக்க வேண்டாம்! இதோ அதனை முழுவதும் அகற்றும் டிப்ஸ்...

 
Published : May 03, 2018, 01:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
இனி கருவளையத்தை மேக்கப் போட்டு மறைக்க வேண்டாம்! இதோ அதனை முழுவதும் அகற்றும் டிப்ஸ்...

சுருக்கம்

Do not cover the embryo anymore Here are tips to get rid of it ...

விரைவில் கருவளையத்தைப் போக்கும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்.

பயன்படுத்திப் பாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும்....

அகத்திக் கீரை :

கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது.

பூசணிக்காய் :

பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கு கண்மேல் வைத்தால் மெல்ல மெல்ல கருவளையம் மறையும்.

சாமந்திப் பூ :

இரண்டு கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 1 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, உடனே மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.

தாமரைப் பூ :

தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 2 ஸ்பூன் விளக்கெண்ணெயும், 1 ஸ்பூன் தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்

தக்காளி வெள்ளரி கலவை :

ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.

ஆரஞ்சு சாறு :

கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க