நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது மூளை என்ன வேலை செய்யுதுனு தெரியுமா?

First Published Aug 3, 2017, 1:24 PM IST
Highlights
Do you know what the brain works when we are sleeping?


இரவில் நாம் தான் தூங்குகிறோமே தவிர, நமது உடல் உறுப்புக்கள் தூங்குவது இல்லை. நாம் தூங்கினாலும், தூங்காமல் விழித்துக் கொண்டு நமது மூளை தான் மற்ற அனைத்து உடல் உறுப்புகளையும் இயக்குகிறது,

15 நிமிடங்கள் தூங்கும் போது

நீங்கள் காலை அல்லது மாலை வேளையில் குட்டி தூக்கம் போடும் போது, மூளை தனது எனர்ஜியை அதிகரித்துக் கொள்ளுமாம். இதனால் நிறைய கற்கவும், நினைவுகளை சேமிக்கவும் செய்கிறது நமது மூளை.

30 நிமிடங்கள் தூங்கும் போது

நீங்கள் 30 நிமிடங்கள் தூங்கும் போது உங்கள் மூளை, கற்பனை திறன் மேம்பாட்டு வேலைகளில் ஈடுபடுகிறதாம். மற்றும் அதே வேளையில் நினைவுத்திறனை பெருக்கிக் கொள்ளவும் செய்கிறது

45 நிமிடங்கள் தூங்கும் போது

அரைமணி நேரத்திற்கு மேல் நீங்கள் தூங்கும் போது அதிக விஷயங்களை நினைவுக் கொள்ள உதவுகிறது மூளை. இந்த நேரத்தில் தான், எது வேண்டும், வேண்டாம் என முடிவு செய்து, நினைவுகளை சேமிக்கிறது மூளை.

ஒரு மணிநேரம் தூங்கும் போது

ஓர் ஆய்வில், ஒரு மணி நேரத்திற்கு மேல் நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிய உதவுகிறது என கூறப்பட்டுள்ளது. நீங்களே கூட சில சமயங்களில் இதை உணர்திருக்கலாம். ஏதேனும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் இருந்திருப்பீர்கள், ஆனால், கொஞ்ச நேரம் தூங்கி எழுந்த பிறகு அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அதற்கு இது தான் காரணம்.

ஒருமணி நேரத்திற்கு மேலாக தூங்குவது

ஒருமணி நேரத்திற்கு மேல் நீங்கள் தூங்குவது நல்ல உறக்கம் தான். இந்த நேரத்தில் உங்கள் மூளையும் நன்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.

தூங்கி எழுந்த பின்பு

1.. நீங்கள் தூங்கும் முன்பு இருப்பதை விட, தூங்கி எழுந்தவுடன் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். இது, உங்கள் மூளை நன்கு சுறுசுறுப்பாக இருப்பதற்கான அறிகுறி.

2.. வேலைக்கு இடையில் 20 நிமிடங்கள் குட்டி தூக்கம் போட்ட பிறகு நீங்கள் வேலை செய்ய ஆரம்பித்தால், நீங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியும். ஏனெனில், உங்கள் உடலோடு சேர்ந்து, உங்கள் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்.

3.. நீங்கள் உறங்குவது உங்கள் மூளைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் உங்கள் வேலையில் சிறந்து செயல்படவும் உறக்கம் உதவுகிறது.

4.. மன சோர்வு அல்லது மன அழுத்தமாக நீங்கள் உணர்தால், 15 நிமிடம் ஓர் குட்டி தூக்கம் போடுங்கள். இது மன அழுத்தம் குறைய நல்ல முறையில் உதவும்.

5. நல்ல உறக்கம் உங்கள் ஞாபகமறதியை குறைத்து, நினைவுத் திறனை அதிகரிக்க உதவும். உறக்கம், உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் நன்கு ஆக்டிவாக செயல்பட உதவுகிறது, புத்துணர்ச்சி அளிக்கிறது.

click me!