உங்களுக்குத் தெரியுமா? நாம் கட்டிப் பிடித்து தூங்கும் பஞ்சு பொம்மைகளால் நமக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும்…

 
Published : Oct 04, 2017, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
உங்களுக்குத் தெரியுமா? நாம் கட்டிப் பிடித்து தூங்கும் பஞ்சு பொம்மைகளால் நமக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும்…

சுருக்கம்

Do you know We will have breathing problems by wearing tied cotton toys ...

நாள்தோறும் நாம் பயன்படுத்தும் இந்த ஏழு பொருட்களால் நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு நமக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

1.. படிகக் கல் 

படிகக் கல்  பயன்படுத்துவதால் சுலபமாக பாக்டீரியா மற்றும் நச்சு கிருமிகளின் தொற்றுகள் ஏற்படுகிறதாம். படிகக் கல்  பயன்படுத்தும் முன்னர் அதை சுடுநீரில் கழுவிய பிறகு பயன்படுத்துமாறு கூறப்படுகிறது.

2.. ரப்பர் / பிளாஸ்டிக் சமையலறை பொருட்கள்

ரப்பர் அல்லது பிளாஸ்டிக் கலவை கொண்ட சமையலறை பொருட்கள். இவு தான் சமையலறையில் இருக்கும் மிகவும் அழுக்கான பொருட்கள் என்று கூறுகிறார்கள். ஈஸ்ட் தொற்றுகள் எல்லாம் ஏற்பட இது முக்கிய காரணமாக இருக்கிறதாம். இதில் இருக்கும், வளைவுகள் மற்றும் இடுக்குகளில் நச்சு, பக்டீரியாக்கள் சுலபமாக தங்கிவிடுகிறதாம். எனவே, இது போன்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என கூறப்படுகிறது.

3.. காது குடையும் பஞ்சு

தினசரி குளித்த பிறகு நாம் அனைவரும் காதை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கருவி தான் இந்த காது குடையும் பஞ்சு. ஆனால், மருத்துவர்கள் பஞ்சை காது குடைய பயன்படுத்துவது தவறு என்று கூறுகிறார்கள். இதனால் காதில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. உண்மையில், காதை சுத்தம் செய்கிறேன் என குடைய தேவையே இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

4.. ஆன்டி-பாக்டீரியல் சோப்பு

ட்ரைக்லோசன் (Triclosan) எனும் இரசாயன கலப்புடன் தான் ஆன்டி-பாக்டீரியல் சோப்பு தயாரிக்கப்படுகிறது. ஆனால், இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் பாக்டீரியல் தாக்கம் எதிர்வினையாக முடிவு தரும் என்று கூறுகிறார்கள்.

5.. பொம்மைகள்

வீடுகளில் அழகுக்காக நாம் பொம்மைகளை வாங்கி வைக்கிறோம். அதனுடன் விளையாடுவதும் உண்டு, சில சமயங்களில் வெறுமென அதை கையில் வைத்துக்கொண்டு டிவி பார்ப்பதும் உண்டு. உண்மையில் பஞ்சு உள்ளே வைத்து தைக்கப்பட்ட பொம்மைகள் தூசுகளை காந்தம் போல இழுப்பவை. இது, சுவாச கோளாறுகளை ஏற்படுத்த கூடியவை ஆகும்.

6.. பற்பசை

தினமும் பற்கள் பளிச்சிட நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் அழுக்கை போக்குவதற்கு பதிலாக நமது பற்களின் ஆரோக்கியத்தை தான் போக்குகிறது. பற்களின் மேற்புறம் இருக்கும் எனாமலை இது அரித்து விடுகிறது.

7.. குளிக்க பயன்படுத்தும் மஞ்சி

பெரும்பாலும் நாம் குளித்துவிட்டு அந்த உடல் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் மஞ்சியை அப்படியே வைத்துவிடுவோம். இவ்வாறு செய்வதால் ஃபங்கஸ், பாக்டீரியாக்கள் மஞ்சிகளின் உட்பகுதியில் தங்கிவிடுகின்றன. மீண்டும், மீண்டும் இவ்வாறு செய்வதால் உங்கள் சருமத்தில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க