உங்களுக்குத் தெரியுமா? தானியங்களில் இருக்கும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் கல்லீரலுக்கு ரொம்ப நல்லது...

 
Published : Jan 08, 2018, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
உங்களுக்குத் தெரியுமா? தானியங்களில் இருக்கும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் கல்லீரலுக்கு ரொம்ப நல்லது...

சுருக்கம்

Do you know Very good for vitamin B-complex liver in grains

உடலில் பிரதான உறுப்பான கல்லீரலை சரியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் கல்லீரல் நமது உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்துகிறது.

அத்தகைய கல்லீரலின் வேலையை சரியாக நடத்துவதற்கு ஒரு சில உணவுகள் உதவுகின்றன. அத்தகைய உணவுகளை உட்கொண்டால் உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கி, கல்லீரலும் ஆரோக்கியமானதாக இருக்கும். 

இதோ அத்தகைய உணவுகள்...

1.. பூண்டு

உடலை நன்கு சுத்தப்படுத்த பூண்டு ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அந்த பூண்டு கல்லீரலில் உள்ள நொதிப் பொருளை சரியாக இயக்குகிறது. அதாவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் அல்லீசின் மற்றும செலினியம் என்னும் பொருட்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உதவுகிறது.

2.. திராட்சை

கல்லீரலை சரியாக பாதுகாப்பதற்கு திராட்சை உதவுகிறது. ஏனெனில் திராட்சையில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை பாதிக்கும் பொருட்களிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல், கல்லீரலின் செயல்களையும் சரியாக இயக்குகிறது.

3.. கிழங்கு வகை காய்கறிகள்

உண்ணும் உணவில் கிழங்கு வகை காய்கறிகளான பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், அந்த காய்கள் கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுபிக்கும். ஆகவே இத்தகைய காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

4.. பச்சை காய்கறிகள்

உணவில் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே பச்சை காய்கறிகள் தான், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற சிறந்த உணவுப் பொருட்கள். ஏனெனில் அவை சூரியகதிர்களிடமிருந்து ஒளிச்சேர்க்கையின் மூலம் குளோரோபிள்களை உற்பத்தி செய்கின்றன, அதனால் அவற்றை சாப்பிடுவதால், உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கிவிடுகின்றன. அதிலும் பாவற்காய், கீரைகள் மற்றும் முட்டை கோஸ் மிகவும் சிறந்த காய்கறிகள்.

5.. ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதில் உள்ள அதிகமாக பெக்டின், செரிமானப் பாதையில் உள்ள டாக்ஸின்களை சரியாக, சுத்தமாக வெளியேற்றுகிறது.

6.. ஆலிவ் ஆயில்

ஆலிவ் எண்ணெயின் பயன்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் இந்த எண்ணெயில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை சரியாக பிரிப்பதற்கு உதவுகிறது. மேலும் எந்த ஒரு டாக்ஸின்களும் அதிகமாக சேராமல் தடுப்பதோடு, இதன் வேலையை நன்கு செயல்படுத்துகிறது.

7.. தானியங்கள்

தானியங்களில் உள்ள வைட்டமின் பி- காம்ப்ளக்ஸ், கல்லீரலுக்கு மிகவும் நல்லது. அதிலும் ப்ரௌன் அரிசி, நவதானிய மாவுகள், சோயா மாவு போன்றவை அனைத்தும் அளவுக்கு அதிகமான நன்மையை கல்லீரலுக்குத் தருகிறது.

இந்த உணவுப் பொருட்களை உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Iron Deficiencies Symptoms : உடம்புல இரும்புச்சத்து குறைஞ்சா இந்த 'அறிகுறிகள்' தெரியும் 'அலட்சியம்' பண்ணாதீங்க
Moringa Water Benefits : முருங்கை தண்ணீருக்கு இவ்ளோ பவரா? தினமும் '1' கிளாஸ் குடிச்சா உடல்ல இந்த மாற்றங்கள் நடக்கும்