சர்வரோக நிவாரணியான எலுமிச்சம் பழத்தில் பொதிந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்...

 
Published : Jan 08, 2018, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
சர்வரோக நிவாரணியான எலுமிச்சம் பழத்தில் பொதிந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்...

சுருக்கம்

The medicinal properties contained in the lavish fruit lime juice ...

எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழத்தை  சமையலில் சுவைக்காக சேர்த்துக் கொண்டாலும் அதில் நிறைய மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. இதனை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.

** ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது.

** முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.

** எலுமிச்சம் பழரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்கடானிக் ஆகும். உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.

** இத்தனை நன்மை செய்யக் கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக் கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும். அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்று விடும்.

** கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும். நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

** பழங்களைப் போலவே காய்கறிகளும், மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தணிக்கும் வகையில் தான் உள்ளது. நோய்களை முழுவதுமாக குணப்படுத்துகிறதோ இல்லையோ ஆனால் நோய்வராமல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

** நமது முன்னோர்களும், சித்தர்களும் காய்கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன் திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு.

** நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய்கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய்கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது.

** இந்த நார்சத்தற்ற நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம் தான் பெற முடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதி காலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.

** உயிரியல் ரசாயன மாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் சி ஆகும். ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன? என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறை தான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி. ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது.

** தக்காளி, மிளகு, முட்டைக் கோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில் தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து ஆனால் ஒன்று தெரியுமா? இந்த மாத்திரைகளில் காய்கனிகளில் இருப்பதை விட குறைவாகத்தான் வைட்டமின் சி இருக்கிறது.

** குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி கிராமும், பாலூட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சி யும் தினம் தேவையாகும். நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது.

** முடிவில் நிறமாற்றம், முடி உதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம். எலுமிச்சம் சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு.

** இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். 

** இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படையாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

Iron Deficiencies Symptoms : உடம்புல இரும்புச்சத்து குறைஞ்சா இந்த 'அறிகுறிகள்' தெரியும் 'அலட்சியம்' பண்ணாதீங்க
Moringa Water Benefits : முருங்கை தண்ணீருக்கு இவ்ளோ பவரா? தினமும் '1' கிளாஸ் குடிச்சா உடல்ல இந்த மாற்றங்கள் நடக்கும்