கற்பூரம் என்ற வாசனைப் பொருள் பசுமை மாறாத கற்பூர மரம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவை. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் வளர்க்கப்படுகிறது.
இந்தியாவில் அலங்காரத்தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இது கற்பூரம் தயாரிக்க தோட்டப்பயிராக பயிரிடப்படுகிறது.
கற்பூர எண்ணெய் உயரமான பசுமையான மரத்தின் பட்டை மணம் கொண்டது. கட்டைப்பகுதி கடினமானது. மஞ்சள் பழுப்பு நிறமுடையது. அதிக மணம் கொண்டது. இலைகள் தடித்தவை. மணமுடையவை. தளிர்கள் செம்மை நிறத்துடன் தோன்றி பின்னர் கரும்பச்சை வண்ணம் பெறுகின்றன.
மஞ்சள் நிறமுடைய மலர்கள் சிறியவை. கற்பூர மரத்தின் கட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை. பதிமூன்றாம் நூற்றாண்டினைச் சார்ந்த மார்கோபோலோ என்ற மாலுமி கற்பூர எண்ணெயினை சீனர்கள் பெரிதும் பயன்படுத்தினர்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
கற்பூரமரத்தில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் உள்ளன. கேம்ஃபர், செப்ரோல், யூஜினால் மற்றும் டெர்பினியரல், இவற்றுடன் லிக்னான்களும் காணப்படுகின்றன.
மார்புச்சளி போக்கும்
உடல்வலிகளுக்கு மேல் பூச்சாகப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. வலிபோக்கும் தயாரிப்பு மூட்டுவலி, நரம்பு புடைப்புகள், மற்றும் முதுகுவலி போக்க உதவும். மார்புச்சளி போக்க மார்பு மீது பூசப்படுகிறது.
குழந்தைகளின் மார்புச்சளி போக்க தேங்காய் எண்ணெயினை சற்று சூடுபடுத்தி அதில் சிறிதளவு கற்பூரத்தினைக் கரைத்து கை மருந்தாக மார்பில் பூசப்படுகிறது.
கற்பூரத்தினால் சளி, இசிவு, ஜன்னி, வாந்தி, சுரம், மந்தம், தீப்புண், சிலேத்தும வாதப்பிணிகள், கிருமிநோய், காதுவலி, முகநோய் முதலியன குணமாகும். இதைச் துணியில் முடிந்து முகர்ந்துவர ஜலதோஷம், தலைவலி, சுரதோஷம் முதலியன குணமாகும்.
கற்பூரம் வயிற்றுப் புழுக்களுக்கு எதிராகச் செயல்படும் பூச்சிக் கொல்லிகளில் இடம்பெறுகிறது . ஆலிவ் எண்ணெய் (4 பங்கு) கற்பூரம் (1 பங்கு) கலந்த கலவையானது தசைவலி, மற்றும் வீக்கங்களை போக்க வல்லது.
தோல் வியாதிகளான கடுங்குளிர் கொப்புளங்கள் மற்றும் குளிர் புண்களுக்கு தடவப்படுகிறது. விஷபேதிகட்கு வழங்கும் மருந்துகளுடன் இதையும் குன்றியெடை சேர்த்துக் கொடுக்க விரைவில் குணப்படும்.
கற்பூரத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து சீதளம் மிகுந்துள்ள பாரிசம்களில் தேய்க்க உஷ்ணம் பிறக்கும். பச்சைக் கற்பூரத்தினால் குன்மம், சூலை, வாதம், கபம் மேகப்பிணிகள் முதலியன குணமாகும்.
கற்பூர எண்ணெய்யினை மருந்து, வாசனைப்பொருள் மற்றும் இறந்தவர் உடலைப் பதப்படுத்தும் திரவமாகவும் பயன்படுத்துகின்றனர்.