உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு...

Asianet News Tamil  
Published : May 19, 2018, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு...

சுருக்கம்

Do you know Disease to prevent diabetes

உலகளவில் அதிகமாக சர்க்கரை வியாதி பரவி வரும் நாடுகளில் இந்தியாதான் முதலிடம். அதிலும் 30-45 வயதிற்குள்ளானவர்கள் அதிக அளவு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை வியாதியில் இருந்து தப்பித்து முழுமையான பலனை அடையலாம். 

** வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீத்தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.

** முதல் நாள் இரவில் வெந்தய்த்தை ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். ஊற வைக்காமல் வெந்தய்த்தை வெறுமனே சாப்பிடுதல் உடலுக்கு பாதிப்பை தரும்

** வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.

** வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

** குறைந்த தீயில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் சேலட்டின் மீது தூவி சாப்பிடவும்.

** சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கச் செய்யும்.

** தாய்ப்பால் சுரக்க வைக்கும். புற்று நோயை தடுக்கும். உடல் சூட்டிய தணிக்கும். ரத்த சோகையை குணமாக்கும்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!