பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற முடியை போக்க இந்த இலை உதவும்..

 
Published : May 19, 2018, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற முடியை போக்க இந்த இலை உதவும்..

சுருக்கம்

This leaf helps to get rid of unnecessary hair growth in women.

குப்பை மேனியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது...

வயிற்றுப் புழுக்கள் நீங்க : 

குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்..

சொறி, சிரங்கு நீங்க:

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

புண் ஆற : 

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

நச்சு நீர் : 

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

மந்தம் : 

குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் வலி , கால் வலி, மந்தத்தன்மை போன்றவை நீங்கும்.

தேவையற்ற முடி : 

முகத்தில் பெண்கள் சிலருக்கு பூனை மீசை தாடி போன்றவை வளர்ந்து முக அழகை கெடுக்கும்,. அவர்கள் குப்பை மேனியை, கஸ்தூரி மஞ்சளுடன் அரைத்து முகத்தில் தடவி வந்தால் நாளைடவில் முடி உதிர்ந்துவிடும்.

PREV
click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!