
குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷயம் அல்ல. அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குதான் மிகவும் கஷடம்.
குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயசு ஆகும்வரை சொல்லவே வேண்டாம். எதுக்கு அழகிறது, பசிக்கிறதா அல்லது ஏதேனும் கடித்து விட்டதானு? தெரியாம தாய்மார்கள் முழிப்பர்.
ஐந்து மாதக் குழந்தை வயிறு வலியால் அழுதால் கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி குழந்தையோட வயித்துல பூசி விடவேண்டும்.
ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடலாம்.. இரண்டு நிமிடங்களில் குழந்தையின் வயிற்று வலி நீங்கி குழந்தை சிரிக்கும்.
சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, உரசிய விழுதை குழந்தையோட நாக்குல தடவினால் பிரச்சனை சரியாகிடும்.
சின்னக் குழந்தைகள் வாந்தி பண்ணினால், வசம்பை சுட்டு பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினால் உடனே குணம் கிடைக்கும். கிராமங்களில் வசம்புக்கு ‘பிள்ளை வளர்ப்பான்’ என்றொரு பெயரே உண்டு.
சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போகுதா? கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை கல்லில் உரைச்சு தாய்ப்பால்ல கலந்து குடுத்து பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூன்று வேளையும் இப்படிக் கொடுத்து வந்தால் மழுவதும் குணமாகிடும். ஆனால், ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. அதிகமாகிவிட்டால் குழந்தைக்கு மயக்கம் வரவும் வாய்ப்பு இருக்கு.