உங்களுக்குத் தெரியுமா? மரபணுக் குறைபாடுகளை போக்கும் தன்மை பனிவரகிற்கு உண்டு…

 
Published : Jun 02, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
உங்களுக்குத் தெரியுமா? மரபணுக் குறைபாடுகளை போக்கும் தன்மை பனிவரகிற்கு உண்டு…

சுருக்கம்

Do you know panivaraku has a tendency to cure genetic defects

அதிக எடை:

பனிவரகு மற்றும் பிற சிறுதானியங்களை தானியங்களுக்கு மாற்றாக உட்கொள்ளும்போது அதிக எடை போடாது. சீக்கிரம் பசி எடுக்காது. குறைவாக உண்டாலே போதும்.

நரம்பு மண்டலம்:

இதில் உள்ள லெஸிதின் என்னும் கொழுப்பு, நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் தன்மை கொண்டது. நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

சருமம்:

சருமத்தில் சீக்கிரம் சுருக்கம் விழாமலும் மினுமினுப்புடன் இருக்கவும் உதவும். நரை -மூப்பை தள்ளிப் போடும் குணம் உடையது. 

எலும்புகளின் அடர்த்தி:

இதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ் இரண்டுமே எலும்புகளின் அடர்த்திக்கு உதவி, சிறு வயதில் எலும்புகளின் வளர்ச்சிக்கும்  உதவக்கூடியவை.

இதயம்:

பொதுவாக தானியங்களில் உள்ள மாவுச்சத்தானது, நாம் தேவைக்கு அதிகமாக உண்ணும் போது டிரை கிளிசரைடு என்னும் கொழுப்பாக மாற்றப்படும். அது இதய நோய்க்கு அடி கோலும். ஆனால், பனிவரகும் மற்ற சிறு தானியங்களும் டிரை கிளிசரைடு என்னும் கொழுப்பாக மாற்றப்படாது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலிருக்க உதவும். இதிலுள்ள நார்ச்சத்தும் இதயத்துக்கு நல்லது செய்யும். அதிக கொழுப்பு உடலில் சேராது.

நீரிழிவு: 

இரண்டாம் வகை நீரிழிவை தடுக்கும் இன்சுலினை சரிவர சுரக்கச் செய்யும் தன்மை உண்டு.

கல்லீரல் கற்கள்: 

அதிகப்படியாக பித்த நீர் சுரக்கும் போது கல்லீரலில் கற்கள் உருவாகும். இதில் உள்ள கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து அதிக பித்த நீர் சுரப்பதை தடுக்கும். அதனால் கல்லீரல் கற்கள் உருவாகாமல் இருக்க உதவும்.

மரபணுக் குறைபாடுகள்:

ஒவ்வொரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறையினருக்கு மரபணுக்கள் மூலம் பலவித குறைபாடுகள் தொடர்ந்து வரும். பாஸ்பரஸ் குறைபாடு உள்ள உணவும் இதற்கு ஒரு காரணம். பனிவரகில் பாஸ்பரஸ் சிறந்து இருப்பதால் இதுபோன்ற குறைபாடுகளை தடுக்கும்.

அலர்ஜி: 

கோதுமையினால் சிலருக்கு ‘சிலியாக்’ எனப்படும் அலர்ஜி ஏற்படும். மாற்றாக பனிவரகு சேர்த்துக் கொள்ளலாம். அலர்ஜியை ஏற்படுத்தும் ‘க்ளூடன்’ இதில் அறவே இல்லை.

நோய் எதிர்ப்புத் திறன்:

வைட்டமின் பி 6, துத்தநாகம் (Zinc) நமக்கு நோய் எதிர்ப்புத் திறனைத் தரும். உடல் சரிவர இயங்கவும் உதவும். உடல் இயக்கக் குறைபாடுகள் வராது. ஆபரேஷன் செய்த பின் உடல் சீக்கிரம் தன் நிலைக்கு திரும்புவதற்கு இந்தச் சத்துகள் தேவை. அந்த நேரங்களில் இந்த சிறுதானியங்களை கஞ்சியாக செய்தும் உட்கொள்ள லாம். சத்துமாவாக செய்து சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கும் தரலாம். சுலபமாக ஜீரணமும் ஆகும்.

ஜீரண மண்டலம்: 

பலவிதமான அமிலத்தன்மை உணவுகள் - முக்கியமாக தானியங்கள், பருப்பு, பயறு வகைகள் சாப்பிடும் பலருக்கும் புளித்த ஏப்பம், அஜீரணம் வர வாய்ப்புகள் உண்டு. பனிவரகு உட்கொள்ளும் போது சுலபமாக ஜீரணமாகும். புளிப்பு ஏப்பம் வராது. அமிலத் தன்மை அதிகரிக்காது.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்