உங்களுக்குத் தெரியுமா? உதடுகள் மென்மையாக இருக்க லிப் -பாம்களுக்கு பதிலாக நெய் தடவலாம்... 

 
Published : Jan 05, 2018, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
உங்களுக்குத் தெரியுமா? உதடுகள் மென்மையாக இருக்க லிப் -பாம்களுக்கு பதிலாக நெய் தடவலாம்... 

சுருக்கம்

Do you know Let the lips be soft and lip instead of ghee ...

 

அழகைப் பராமரிப்பதற்கு சில அழகுக் குறிப்புகள் இதோ உங்களுக்காக...

** வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும் என்று பாட்டிகள் சொல்வார்கள். எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.

** முகத்தை கழுவுதல்

முகத்தை தினமும் மூன்று முதல் நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

** ஆவிப் பிடித்தல்

ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும் அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்து தான், அழகைப் பராமரித்து வந்தார்கள். எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம்.

** பழங்கள்

கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக பழங்களை வைத்து மாஸ்க் போட்டால் அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும். அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.

** முடி மசாஜ்

தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

** தயிர்

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால் கூந்தல் நன்கு பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

** சூப்பர் மாய்ஸ்சுரைசர்

சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால் சருமம் மென்மையாக ஈரப்பதத்துடன் சுருக்கமின்றி இருக்கும்.

** எலுமிச்சை

பாட்டிகள் சொல்வதில் தவறாமல் கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானவை எலுமிச்சையை தலைக்கு பயன்படுத்துவது தான். ஏனெனில் எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் தலையானது சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

** நெய்

உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல் சிறிது நெய்யை தடவி வந்தால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

** கடுகு எண்ணெய்

கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக தினமும் காலையில் எழுந்ததும் கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கைகள் மென்மையாக முடியின்றி இருக்கும். இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்
Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!