மூட்டுகளை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வெள்ளரிக்காயை சாப்பிட்டாலே போதும்.. 

Asianet News Tamil  
Published : Jan 05, 2018, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
மூட்டுகளை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வெள்ளரிக்காயை சாப்பிட்டாலே போதும்.. 

சுருக்கம்

Eat cucumber to keep the joints healthy

வெள்ளரிக்காய்

** உடல் வறட்சியை நீக்கும்

தண்ணீர் குடிப்பதற்கு நேரம் கிடைக்காமல் வேலையாக இருக்கிறீர்களா? அப்படியானால் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். அதில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இது தண்ணீர் குடிக்காததை ஈடுசெய்யும்.

உடல் சூட்டை தணிக்கும்

வெள்ளரிக்காய் உண்ணுவதால், உடலில் ஏற்பட்டுள்ள வெப்பத்திற்கு நிவாரணம் கிடைக்கும். அதிலும் சருமத்தில் வெள்ளரிக்காயை சருமத்தில் தடவினால், சூரிய கதிர்களில் இருந்து அது உங்களை காக்கும்.

நச்சுப் பொருட்களை நீக்கும்

வெள்ளரிக்காயில் உள்ள நீர், உடலில் இருக்கும் கழிவை நீக்கும் ஒரு துடைப்பமாக விளங்குகிறது. அதனை சீரான முறையில் சாப்பிட்டால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரையச் செய்யும். வெள்ளரிக்காயில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது 

இதனால் அதை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி இதில் உள்ளது. இதனை இன்னும் சத்துள்ளதாக மாற்ற, அதனை கீரை மற்றும் கேரட்டுடன் சேர்த்து ஜூஸ் போட்டு குடியுங்கள். மேலும் வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்.

ஏனென்றால் தோளில் தேவையான அளவு வைட்டமின் சி உள்ளது. அதிலும் அன்றாடம் தேவைப்படும் அளவில் 12% அடங்கியுள்ளது.

** சருமத்திற்கு தேவையான கனிமங்களை அளிக்கும்

வெள்ளரிக்காயில் அதிக அளவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சிலிகான் உள்ளது. அதனால் தான் ஸ்பா மற்றும் அழகு சாதன நிறுவனங்கள் பெரும்பாலும் வெள்ளரிக்காயை பயன்படுத்துகின்றனர்.

வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். ஆகவே இதனை சூப் அல்லது சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு வெள்ளரிக்காய் பிடிக்காது என்றால், அதனை அப்படியே எடுத்து தயிரில் நனைத்து கொறிக்கலாம்.

அதனை மெல்லுவதால், தாடைக்கு நல்ல பயிற்சியாக அமையும். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச் சிக்கலை நீக்கும்.

** கண்களுக்கு புத்துயிர் அளிக்கும்

வெள்ளரி துண்டை வீங்கிய கண்களின் மேல் வைத்துக் கொண்டால், அழற்சி எதிர்க்கும் குணங்கள் உள்ளதால் வீங்கிய கண்களுக்கு அவை சரியான நிவாரணியாக விளங்கும்.

** புற்றுநோயை எதிர்த்து போராடும்

வெள்ளரிக்காயில் செகோய்சொலாரிசிரேசினோல், லாரிசிரேசினோல் மற்றும் பினோரெசினோல் அடங்கியுள்ளது. இந்த மூன்று பொருட்களுக்கும் கருப்பை, மார்பகம் புற்றுநோய்களை எதிர்க்கும் தன்மை உள்ளது.

** வாயை நறுமணத்துடன் வைத்திருக்கும்

வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களை குணப்படுத்தி நற்பதமாக வைத்திருக்கும். அதற்கு ஒரு துண்டு வெள்ளரிக்காயை எடுத்து, வாயில் போட்டு கொறித்து ஒரு அரை நிமிடத்திற்கு அங்கேயே வைத்து விடுங்கள். அதிலுள்ள பைடோகெமிக்கல்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.

** முடி மற்றும் நகங்களை மென்மையாக வைத்திருக்கும்

சிலிகா என்ற அற்புதமான கனிமம் வெள்ளரிக்காயில் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும். மேலும் அதிலுள்ள சல்பரும், சிலிகாவும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

** மூட்டு ஆரோக்கியம் மற்றும் கீல்வாதத்திற்கு நிவாரணம்

ஏற்கனவே சொன்னது போல் வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உள்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கும். அதிலும் இதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

** சிறுநீரகத்தை பாதுகாக்கும்

உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

PREV
click me!

Recommended Stories

பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks
குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லை வரக் காரணம்/DrJagadeeswariRajalingam.BSMS.,