
நாம் உண்ணும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் சிறுவயதிலேயே உடல் பருமன் ஏற்பட்டு பெரும்பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இதனால், விருப்பப்பட்ட உடைகளை அணிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் சேர்ந்துவிட்ட கொழுப்புகளை கரைத்து ஃபிட் ஆக்கும் சில டிப்ஸ்.
* உங்கள் டயட் சார்ட்டை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், சற்று குறைத்துக் கொள்ளலாம்.
* ஃப்ரஷ்ஷான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக எடுத்துக்கொள்ளலாம். முழுதானியங்கள் மற்றும் முட்டை, மீன், பால் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும். உணவுக் கட்டுப்பாட்டினால் உடலில் ஏற்படும் மாற்றத்தைக் கூட உங்களால் உணர முடியும்.
* தினசரி 30 முதல் 60 நிமிடங்கள் வரை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும். குறைந்தபட்சம் வாரம் ஐந்து நாள் வீதம் செய்யலாம். இந்த உடற்பயிற்சிகள் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும். மேலும், கால்களுக்கு எனப் பிரத்யேகப் பயிற்சிகளான நடைப்பயிற்சி, ரன்னிங், சைக்ளிங், ஸ்கேட்டிங், ஹைக்கிங் (Hiking) எனப்படும் நீண்டதூர நடைப்பயணம் மேற்கொள்ளலாம்.
* ஸ்குவாடிங் (Squating) பயிற்சியை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் செய்யலாம். ஸ்குவாட்டிங் மற்றும் லஞ்சஸ் பயிற்சியையும் சேர்த்துச் செய்யலாம்.
* லஞ்சஸ் பயிற்சியை 30 நாள்கள் தொடர்ந்து செய்யலாம்.
* எஸ்கலேட்டர், லிஃப்ட் போன்றவற்றைத் தவிர்த்து, படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். தினசரி நாம் பயன்படுத்தும் படிக்கட்டுகளின் எண்ணிக்கை 50 ஆகக் கொண்டால், 1000 கலோரிகளைக் குறைக்கலாம்.