உங்களுக்குத் தெரியுமா? கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாக சாப்பிடுவதால் இதய பிரச்சனைகள் வரும்…

Asianet News Tamil  
Published : Jun 24, 2017, 02:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
உங்களுக்குத் தெரியுமா? கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாக சாப்பிடுவதால் இதய பிரச்சனைகள் வரும்…

சுருக்கம்

Do you know Carbohydrate eating heart foods can cause heart problems ...

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தானிய உணவுகள், வெள்ளை அரிசி சாதம், வெண்ணெய், அவகோடா பழம், உருளைக்கிழங்கு போன்றவை சிறந்த கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்.

இத்தகைய உணவுகளை குறைத்துக் கொள்வதால் உடலில் பல்வேறு மாற்றங்களை சந்திக்க நேரிடும்.

கார்போஹைட்ரேட் உணவு குறைவால் ஏற்படும் பிரச்சனைகள்…

1.. கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாக சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நீரின் அளவு கணிசமாக குறைந்து, உடல் ரீதியான பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

2.. சரிவிகித அளவில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் சாப்பிடுவதை குறைத்தால், மூளைக்கு கிடைக்கும் சக்தி குறைந்து, கொழுப்புகள் அதிகரித்து, மூளைச்சோர்வு நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

3.. மூளைச்சோர்வு பிரச்சனை ஏற்பட்டால், காய்ச்சல், வாய் வறட்சி, வாய் துர்நாற்றம், உடல் வலிமை குறைவு, குமட்டல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

4.. பசி தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அவ்வேளையில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

5.. நீரிழிவு சார்ந்த பிரச்சனைகள், உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.

6.. உடலின் சக்தி குறைந்து மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் மந்தமான மன நிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake