
1.. ஆப்பிள் உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
2.. விட்டமின் குறைவினால் ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்தும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
3.. உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கும்.
4.. இரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது.
5.. குடிகாரர்களின் இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பயன்படுகிறது.
6.. தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.
7.. வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.
8.. ஆப்பிள் ஒரு முழுமையான உணவு. ருசியானது. ஆப்பிள் பழத்தில் உலோகச் சத்துக்கள் நிறைந்துள்ளன. தோல் பகுதியில் விட்டமின் சி நிறைந்துள்ளது. புளிப்பும், இனிப்பும் கலந்த இந்த கனி எளிதில் ஜீரணம் ஆகி குடல் உறுப்புகள் பலம் பெறும். இரத்தம் சுத்தமடையும்.
9.. ஆப்பிள் பழம் குழந்தைகளுக்கு உன்னத உணவு. மஞ்சள் காமாலையை தடுத்து நிறுத்தும் ஆப்பிள் பழத்தின் சாறு.
10.. நரம்புத்தளர்ச்சி, அமிலத்தன்மை, கல் அடைப்பு, பேதி, ஜீரணக் கோளாறுகள் அனைத்தும் ஆப்பிள் சாறால் சரியாகும். மலச்சிக்கல் சரியாகும். இரத்தம் சுத்தமாகும்.