உங்களுக்குத் தெரியுமா? தர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கு...

 
Published : Feb 05, 2018, 02:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
உங்களுக்குத் தெரியுமா? தர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கு...

சுருக்கம்

Do you know 92 percent of water in watermelon strawberry fruits

எந்த காய்கறியில் எவ்வளவு சத்துகள் இருக்கு

வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. சுரைக்காய், முள்ளங்கி, செலரியில் 95 சதவிகிதமும், தக்காளியில் 94 சதவிகிதம், முட்டைக்கோஸில் 93 சதவிகிதம், காலிஃபிளவர், சிவப்பு கோஸ், கீரையில் 92 சதவிகிதமும் நீர்ச் சத்து உள்ளது.

பழங்களில் இருக்கும் சத்துகள் 

தர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதமும், திராட்சையில் 91 சதவிகிதம், அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் 88 சதவிகிதமும், ஆப்பிளில் 84 சதவிகிதம், வாழையில் 74 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது.

** வெங்காயம், ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும் புற்று நோய், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய் தொற்றை தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள லிலின் என்ற ரசாயனம் பாக்டீரியாக்கள், நச்சுகள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றது. இத்துடன் புற்றுநோய்க்கட்டிகள் வளராமலும் தடுக்கின்றது.

** ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்-சி சேகரித்து வைக்கப்பட்டு உள்ளது. இன்டர்பெரான் என்ற ரசாயனத்தை அதிகம் உற்பத்தி செய்கிறது. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்து உடலில் அவை சேராமல் அழிக்கின்றன.

** பாதாம்பருப்பு, வேர்க்கடலை போன்றவைகளில் உள்ள வைட்டமின்-ஈ, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சிறப்பாக செயல்படத்தூண்டுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க