இந்த பத்து பொருட்களையும் வெறும் வயிற்றில் எப்போதும் சாப்பிட வேண்டாம்... அவ்வளவு ஆபத்து...

 
Published : Apr 30, 2018, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
இந்த பத்து பொருட்களையும் வெறும் வயிற்றில் எப்போதும் சாப்பிட வேண்டாம்... அவ்வளவு ஆபத்து...

சுருக்கம்

Do not ever eat these ten items on an empty stomach ... so much danger ...

1.. சோடா

இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

2.. தக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

3.. மாத்திரைகள்

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

4.. ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

5.. காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

6.. காபி

காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

7.. டீ

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

8.. தயிர்

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

9.. வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

10.. சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்…

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!