சாப்பிட்ட பிறகு இந்த விசயங்களை செஞ்சிடவே செஞ்சிடாதீங்க..

 
Published : Jul 08, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
சாப்பிட்ட பிறகு இந்த விசயங்களை செஞ்சிடவே செஞ்சிடாதீங்க..

சுருக்கம்

Do not do these things after eating

நம் உடலில் நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் பழக்க வழக்கங்களும், உணவுமுறைகளும் தான்.

சிலர் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்று சாப்பிடப் பிறகு நடப்பது, சிகரெட் பிடிப்பது என்றெல்லாம் செய்வார்கள்.

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத பல தவறான பழக்கவழக்கங்கள் இருக்கு. அவை….

புகைப்பிடிப்பது

பெரும்பாலான ஆண்கள் சாப்பிட்டதும், ரிலாக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் சிகரெட் பிடிப்பார்கள். அவ்வாறு சாப்பிட்டு முடித்ததும் ஒரு சிகரெட் பிடித்தால், அது 10 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலானது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்களை சாப்பிடுவது

உணவை குறைவாக சாப்பிட வேண்டும் என்று சாப்பிடுவதற்கு முன் பழங்களை சாப்பிடுவோம். ஆனால் உணவு உண்ட பின்பு உடனே பழங்களை சாப்பிட்டால், வயிற்றில் காற்றானது நிறைந்து, மிகுந்த உப்புசத்திற்கு ஆளாக்கிவிடும்.

எனவே பழங்களை சாப்பிட வேண்டுமெனில் உண்ட பிறகு 1-2 மணிநேரத்திற்கு பின்னர் சாப்பிட வேண்டும். அதுவே உணவுக்கு முன் என்றால் 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

டீ குடிப்பது

சிலர் உணவுக்குப் பின் டீ குடிப்பார்கள். ஆனால் அவ்வாறு குடிப்பது தவறு. ஏனெனில் டீயில் அமிலங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

எனவே அப்போது உணவில் உள்ள புரோட்டீனானது, அளவிக்கு அதிகமாகி பின் செரிமானமடையாமல் வயிற்றில் சிரமத்தை ஏற்படுத்தும்.

குளிப்பது

உண்டவுடன் குளிப்பது என்பது ஒரு தவறான பழக்கம். ஏனெனில் இந்த செயலால் இரத்த ஓட்டமானது சீராக கைகள், கால்கள் மற்றும் இதர உறுப்புகளுக்குச் செல்லுமே தவிர, வயிற்றில் இரத்தமானது இல்லாமல் பலவீனமடைந்து செரிமானத்தின் இயக்கமானது பாதிக்கப்பட்டு, உணவு செரிமானமடையாமல் இருக்கும்.

நடப்பது

பொதுவாக மக்கள் உணவை உண்டப் பின் சிறிது தூரம் நடந்தால், 99 வயது வரை வாழலாம் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது தவறான கருத்து.

அவ்வாறு நடக்கும் போது ஏற்படும் செரிமானமானது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சாமல் முற்றிலும் வெளியேற்றிவிடும்.

தூங்குவது

சாப்பிட்டதும் தூங்கினால், உணவானது சரியாக செரிமானமடையாமல் இருக்கும். மேலும் இந்த செயலால் வாயுத் தொல்லை மற்றும் குடலில் ஏதேனும் தொற்றுநோய் வந்து, பின் வயிற்றில் பிரச்சனை ஏற்படும்.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க