பசியைத் தூண்டும் புதினாவின் மற்ற மருத்துவ பயன்கள்…

 
Published : Jul 08, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
பசியைத் தூண்டும் புதினாவின் மற்ற மருத்துவ பயன்கள்…

சுருக்கம்

Medical benefits of peppermint

 

1.. புதினாவை உணவில் சேர்த்து கொண்டால் பசியை தூண்டுவதுடன், உணவிற்கு ருசியையும் கொடுக்கிறது.

2.. தொடர்ந்து வரும் விக்கலை நீக்குவதுடன், வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது. வாத நோய்க்கும், வறட்டு இருமலுக்கும் சிறந்த மருந்தாகும்.

3.. மாதவிடாய் தாமதமாகும் பெண்கள், இக்கீரையை உலர்த்தி தூள் செய்து தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.

4.. புதினா இலையை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும்.

5.. புதினாவுடன் இஞ்சியையும், உப்பும் சேர்த்து அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம், அஜீரணம், பித்தமும் அகலும்.

6.. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

7.. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

8.. மேலும் பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும்.

9.. புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம், மூட்டு வலி, ஆஸ்துமா, ஈரல் சம்பந்த பட்ட நோய்கள், சிறுநீர் உபத்திரம் நீங்கும்.

10.. புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது.

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!