எண்ணெய் சருமத்தில் முகப்பருக்கள் வந்தால் பயப்பட வேண்டாம்? சூப்பர் டிப்ஸ் உள்ளே...

 
Published : Feb 20, 2018, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
எண்ணெய் சருமத்தில் முகப்பருக்கள் வந்தால் பயப்பட வேண்டாம்? சூப்பர் டிப்ஸ் உள்ளே...

சுருக்கம்

Do not be afraid if the acne is in the skin of the skin Inside Super Tips ...

எண்ணெய் சருமத்தில் பல பிரச்சனைகள் உருவெடுக்கும். அதில் முக்கியமானது முகப்பரு. 

சிரிக்கவும் முடியாமல் வலி தாங்க முடியாது. அதோடு முகப்பருக்கள் அளவில் பெரியதாய் ஆக்னே போல் இருந்தால் அது அவ்வளவு எளிதில் போகாது. தழும்பும் உண்டாகி சருமத்தில் ஓட்டை விழச் செய்துவிடும். 

எனவே, எண்ணெய் சருமத்தில் தினந்தோறும் ஸ்க்ரப் செய்வது மிக அவசியம். இதனால் முகப்பரு, தூசு, அழுக்கு, தொற்று ஆகியவை உருவாகாமல் சருமம் பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.

1.. பட்டைப் பொடி :

பட்டைப் பொடி எண்ணெய் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. பட்டைப் பொடியுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் மேல் நோக்கி தேயுங்கள். மூக்கின் ஓரங்களில் முக்கியமாக தேய்த்து கழுவ வேண்டும். இது சிறந்த கிருமி நாசினி. முக்ப்பருவை ஏற்படுத்தும் பேக்டீரியாக்களை அழித்துவிடும். சருமத்தில் சுருக்கங்களும் ஏற்படாது.

2.. சமையல் சோடா :

அதிகப்படியாக எண்ணெய் வழிபவர்களுக்கு சிறந்தது சமையல் சோடா. அதனை 1 ஸ்பூல் அளவு எடுத்து அதோடு பொடி செய்த சர்க்கரையும் சேர்த்து இவற்றுடன் நீர் கலந்து முகத்தில் தேய்க்கவும். எண்ணெய் வழிவது தடுக்கப்படும்.

3.. ஓட்ஸ் :

ஓட்ஸை பொடித்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். சில நிமிடங்கள் விட்ட பின் நன்றாக தேய்த்து கழுவினால் முகப்பருக்கள் வராது.அதிக எண்ணெய் உறிஞ்சப்படும். வாரம் ஒருமுறை செய்யலாம்.

4.. வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் கிருமிகளை அழிக்கும். அதோடு ஈரப்பதம் அளிக்கும். வெள்ளரிக்காயை அரைத்து அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!