நீரிழிவு நோயாளிகள் எவற்றை எவ்வளவு சாப்பிடலாம்? எவற்றை சாப்பிடவே கூடாது? தெரிஞ்சுக்க வாசிங்க…

 
Published : Oct 14, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
நீரிழிவு நோயாளிகள் எவற்றை எவ்வளவு சாப்பிடலாம்? எவற்றை சாப்பிடவே கூடாது? தெரிஞ்சுக்க வாசிங்க…

சுருக்கம்

diabetes patients can eat there

 

நீரிழிவு நோயாளிகள் இவற்றை அதிக‌ம் சா‌ப்‌பிடலா‌ம்

அனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி, முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள், வெங்காயம், வாழைப்பூ, வாழைத் தண்டு, மோர், ஆடை எடுக்கப்பட்ட பால், காய்கறி சூப்.

நீரிழிவு நோயாளிகள் இவற்றை அளவுடன் சாப்பிடலாம்!

தானிய வகைகள், பருப்பு வகைகள். காய்கறிகளில் பச்சைப் பட்டாணி, பீட்ரூட், பீன்ஸ், வாழைக்காய், காரட், சுண்டைக்காய்.

பழவகைகளில் தர்பூசணி, திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள், எலுமிச்சை, ப்ளம்ஸ், வாழைப்பழம், சப்போட்டா, அன்னாசி மற்றும் உலர் பழ வகைகள்.

ஆடை எடுக்கப்பட்ட பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்டவை. முட்டையின் வெள்ளைக்கரு, கோழி இறைச்சி, மீன், சுத்தமான சூப் வகைகள்.

பழங்களானால் ஒரு சில துண்டுகள் (ஒரு நாளில் 100 கிராம் அளவு) பால் ஒரு நாளைக்கு 1/2 லிட்டருக்கு மேற்படக்கூடாது. (மோர், தயிர் மற்றும் இதர பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சேர்த்து)

நீரிழிவு நோயாளிகள் இவற்றை தொடவே க்கூடாது!

சர்க்கரை, வெல்லம், தேன், இனிப்பு பிரெட், ஜாம், குளூக்கோஸ், கஸ்டர்ட் கலந்த இனிப்பு வகைகள், கேக் வகையறாக்கள்.

பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள்.

கொழுப்புச் சேர்ந்த எண்ணெய், பாலாடைக் கட்டி, ஐஸ்க்ரீம் மற்றும் லட்டு, பர்ஃபி, பாயாசம் போன்ற வகைகள்.

கார்ன்ஃப்ளவர், ஆரோரூட் மாவு, ஜவ்வரிசி, வேரிலிருந்து விளையக்கூடிய கிழங்கு வகைகள்.

பருப்பு, எண்ணெய் வித்துக்கள், வியாபார ரீதியில் தயாரிக்கப்படும் பானங்களான ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்றவை.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க