
தயிரில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்...
** தயிர், உடலுக்கு அருமருந்து;
** குளிர்ச்சியைத் தரும்.
** ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.
** பால் குடித்ததும், ஒரு மணி நேரம் கழித்து, 32 சதவீத பால் தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், 91 சதவீதம் ஜீரணமாகிவிடும்.
** பாலில் லாக்டோ என்ற வேதிப் பொருள் கலந்து இருக்கிறது. தயிரில் லாக்டொபஸில் என்ற வேதிப் பொருள் உள்ளது; இது, ஜீரண சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது.
** வயிறு சரியில்லாத போது, வெறும் தயிர் சோறை மட்டுமாவது, உணவாக உட்கொள்லலாம்.
** அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது, ஒரு கப் தயிரில், வெந்தயம் கலந்து சாப்பிட்டால், வயிற்று பொருமல் கட்டுப்படும்.
** பிரியாணி போன்ற உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவு வகைகளை உண்ணும் போது தான் வயிற்றுக்கு அதிக கேடு ஏற்படும்; இதை தவிர்க்க தான், தயிர் உண்கிறோம்.
** தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாக ஜீரணமாகி விடும். சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. தயிரும், பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
** மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து. மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டோர், தயிர், மோரில் சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
** சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்து.