இந்த காயில் ஃபேஸ் பேக் போட்டால் அனைத்து சரும பிரச்சனைகளும் நீங்கும்...

 
Published : Feb 09, 2018, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
இந்த காயில் ஃபேஸ் பேக் போட்டால் அனைத்து சரும பிரச்சனைகளும் நீங்கும்...

சுருக்கம்

This packed face pack will remove all the skin problems.

பூசணிக்காயில் ஃபேஸ் பேக் போட்டால் அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கலாம்...

பூசணிக்காய் சருமத்திற்கும் மிக நல்லது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு ஏற்றது.  பூசணிக்காயை கொண்டு சருமத்தில் அழகூட்டலாம். 

ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற வகையில் பூசணிக்காயை உபயோகப்படுத்தலாம்.

** வறண்ட அல்லது எண்ணெய் சருமம் அல்லது சென்ஸிடிவ் சருமமாக இருந்தாலும், இந்த ஃபேஸியல் பேக் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

பூசணியின் சதைப்பகுதி – அரைக் கப்

தேன் – அரை ஸ்பூன்

பால் – கால் டீஸ்பூன்

பட்டைப் பொடி – சிறிதளவு

** பூசணியின் சதைப்பகுதியை மசித்து, அதனுடம் மற்ற பொருட்களை சேர்த்து, முகத்தில் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், சருமம் பளபளப்பாக இருக்கும். சுருக்கங்கள் போய்விடும். வாரம் இருமுறை இதை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

** பூசணியின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் சர்க்கரை, கலந்து முகத்தில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் கழுவிவிடவும். இது வறண்ட சருமத்தில் ஈரப்பதம் அளித்து, மென்மையாக்கும்.

** பூசணியின் சதைப்பகுதியுடன், சிறிது எலுமிச்சை சாறு, ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து, முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்த பின் 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இவை எண்ணெய் சருமத்தில் அமில காரத் தன்மையை சமன் செய்யும்.

** பூசணி முகப்பருக்களை விரட்டும் தன்மை கொண்டது. பூசணி சதைப்பகுதியுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, கலக்கவும். இவற்றை முகத்தில் போட்டு காய்ந்தவுடன் கழுவுங்கள். வாரம் 3 முறை இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி