
'விப்ரியோ காலரே' எனும் பாக்டீரியா கிருமியால், தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய் காலரா.
காலரா பாதிப்புக்கு இருக்கு தடுப்பூசி...
காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளி, திறந்த வெளியில் மலம் கழிப்பதால், அதில் உட்காரும் ஈக்கள், காலரா கிருமிகளை சுமந்து குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் உட்காரும். இந்த உணவுகளையும் தண்ணீரையும் பயன்படுத்தும் போது காலரா பரவுகிறது.
கடுமையான வாந்தி, பேதி, வயிற்றுப் போக்கு. இதனால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். காலரா தீவிரமடைந்தால், சிறுநீர் குறைவாக வெளியேறும். மயக்கம் வரும்.
வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிர்த் தடுப்பு மருந்து உள்ளது. ஆனால், காலரா பரவும் காலத்தில் இதை போட்டுக் கொள்ளலாம். மேலும் காலரா பாதிக்கும் ஆபத்துள்ள இடங்களில் வாழும் மக்களுக்கு இது போடப்படுகிறது.
இப்பாதிப்பின் போது பொதுவாக எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை உண்ண வேண்டும். அரிசி கஞ்சி. பார்லி கஞ்சி கொடுக்கலாம். நீர் ஆகாரங்களை, குறிப்பிட்ட இடைவெளியில் குடிக்க வேண்டியது அவசியம்.
காலரா பாதிப்பு இருப்பது தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும். சிறுநீரின் அளவை கண்காணிக்க வேண்டும். மலத்தில் உப்பு சத்து அதிகமாக வெளியேற வாய்ப்புள்ளதால், உப்பு சத்து குறையும் ஆபத்து உள்ளது. எனவே அதையும் சமன் செய்ய பொட்டாசியம் என்ற உப்பை மருந்து வடிவில் ஏற்ற வேண்டும். குழந்தைகள் முதியோர் சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு, மேற்சொன்ன ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு அதிக கண்காணிப்பு தேவை.