
மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் நேரே மருந்து கடைகளுக்கு ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். இது பெண்களுக்கு இயற்கை கொடுத்த வரம் மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே எதிர்மறையானா விளைவுகளை ஏற்படுத்தும்.
விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும்.
மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டும். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா, மாத்திரைகளைச் சாப்பிட்டால் வயிற்று வலி, அல்சர்,மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் தாக்கும் வாய்ப்பு அதிகம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வாந்தி,வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம்.
இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். இதனால் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்.
மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம்.