இரவில் தூங்க முடியவில்லையா? இதோ கண்களைத் தழுவும் தூக்கத்தை பெறும் வழிகள்…

 
Published : Oct 05, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
இரவில் தூங்க முடியவில்லையா? இதோ கண்களைத் தழுவும் தூக்கத்தை பெறும் வழிகள்…

சுருக்கம்

Can not sleep at night? Here are the ways to get your sleeping eyes ...

ஒவ்வொரு மனிதனும் தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஆழ்ந்து சுகமாக தூங்க வேண்டும். இப்படி நன்கு தூங்கி எழுந்தால் தான் விழித்திருக்கும் 16 மணி நேரத்தில் மனமும் உடலும் திறமையுடன் செயல்படும்.

எனவே இரவில் தூங்க முடியவில்லை என்பவர்கள் இந்த எளிய வழிகளைப் பின்பற்றினால் தூக்கம் உங்கள் கண்களைத் தழுவும்.

1.. இரவு எத்தனை மணிக்கு படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்பதை உறுதியாகத் தீர்மானியுங்கள்.

2.. இரவு தூங்கும் அறை நிசப்தமாகவும், இருட்டாகவும் இருப்பதும் நல்லது. இருட்டு பிடிக்க வில்லை எனில் நீல நிற இரவு விளக்கைப் பயன்படுத்தவும்

3. தூங்கும் அறை காற்றோட்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

4.. பஞ்சுத் தலையணைகள், பஞ்சு மெத்தை, போர்வை சுகமான தூக்கத்தை வரவழைக்கும். தரையிலோ, கட்டிலிலோ படுத்தாலும் பஞ்சு மெத்தைகளையோ உபயோகிக்கலாம்.

5.. தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக பசும்பால் அருந்துவது நல்லது. இது டிரைப்டோபன் அமிலத்தை மூளைக்கு வழங்குவதால் உடனடியாக நரம்பு மண்டலம்
அமைதியாகி உங்களை தூங்க வைக்கும்.

6.. மசாஜ் ,யோகாசனம் மற்றும் தியானம் போன்றவை மனதையும் உடலையும் ஓய்வு நிலைக்குக் கொண்டு வந்து புதுப்பிக்கும். உங்களுக்கு இதில் எது பிடித்ததோ
அதைச் செய்து வாருங்கள்

7.. இரவு உணவை தூங்கச் செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பே முடித்துக் கொள்ளவும். சாதம் நல்லது ,ஏனென்றால் அதிகம் சாப்பிட்டாலும்
எளிதில் ஜீரணம் ஆகும்.

8.. நெஞ்செரிச்சல் ஏற்படாமல் இருக்க இடக்கைப் பக்கமாகவே படுக்கவும். மல்லாந்தோ, வலகைப்பக்கமோ படுத்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கலையும் எப்போதும்
குப்புறப்படுக்காதீர்கள்

9.. தினமும் உடற்பயிற்சி துரித நடைப்பயிர்ச்சி , ஏரோபிக் உடற்பயிற்சி இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றவும். அருகில் உள்ள இடங்களுக்கு துரித நடைப்
பயிற்ச்சியாக சென்று வருவது நல்லது

10.. பல ஆண்டுகளாகத் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மதியமும், இரவும் கெட்டித் தயிர் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் போதும் தூக்கமின்மை குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க
Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்