இரவு சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடலாமா? இதோ பதில்…

 
Published : Aug 02, 2017, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
இரவு சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடலாமா? இதோ பதில்…

சுருக்கம்

Can banana eat immediately after dinner? Here the answer ...

இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச் செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது.

இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை. ஏனென்றால், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும்.

ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.

இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவாக செரிமானம் ஆகும், காலைக்கடன்களை எந்தவித சிரமமும் இல்லாமல் செய்ய முடியும் என்று கூறுவதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது.

வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

யாரெல்லாம் சாப்பிடலாம்?

பன்னிரெண்டு வயது வரை குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழம் கொடுக்கலாம். இவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஒருசில குழந்தைகளுக்கு சளித்தொல்லை ஏற்படும்.

வயதானவர்களும் நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

இதன் காரணமாக இவர்களுக்கு உடலில் கலோரி அளவு அதிகரிக்கும். எனவே, இவர்களால் களைப்படையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!