குழந்தைகளின் மறதி வியாதி முதல் புற்றுநோய் வரை குணப்படுத்துவது தாய்ப்பால் தானாம் - ஆய்வு சொல்லுது…

 
Published : Aug 23, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
குழந்தைகளின் மறதி வியாதி முதல் புற்றுநோய் வரை குணப்படுத்துவது தாய்ப்பால்  தானாம் - ஆய்வு சொல்லுது…

சுருக்கம்

Breastfeeding can be cured from illness to cancer - study says ...

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தருவது சிறந்த தொடக்கம். ஆனால் நோய்களை விரட்டும் மருத்துவ குணமும் தாய்ப்பாலுக்கு உண்டு.

தாய்ப்பாலின் உள்ள மூலசெல்களுக்கு மறதி வியாதி முதல் புற்றுநோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்று சர்வதேச நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

மூலசெல்களுக்கு உடலில் உள்ள எந்தச் செல்லின் தன்மையையும் மாற்றியமைக்கும் ஆற்றல் உண்டு.

புற்றுநோய், நீரிழிவுநோய், பார்வைக் குறைபாடு, பக்கவாதம் போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இச்செல்களுக்கு உண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மூலசெல் மருத்துவத்தில் தாய்ப்பால் புதிய ஆராய்ச்சி வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது என்று மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் ஹசியோடோவ் தெரிவிக்கிறார்.

தாய்ப்பாலில் உள்ள மூலசெல்கள் பன்முகப் பயன்பாட்டுத் தன்மை மிக்கது என்று நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவை கருத்தன்மை மிக்கதாக இருந்தால் மூலசெல்களைப் பெற இது ஒரு புதிய வழியாக அமையும் என்று லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரிஸ் மேசன் தெரிவித்தார்.

அவற்றுக்கு பன்முகப் பயன்பாட்டுத்தன்மை இல்லை என்றாலும் தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலில் உள்ள மூலச்செல்களை சேர்த்து வைத்து பிற்காலங்களில் வரும் நீரிழிவு போன்ற நோய்களை குணமாக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நியு கேசில் பல்கலைக்கழக விஞ்ஞானி லைல் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க