மன வலிமையாலும் உடலை கட்டுக்கோப்பாக வைக்கலாம்…

First Published Dec 21, 2016, 3:24 PM IST
Highlights


நம் உடலானது  உயிரை தக்க வைத்துக் கொள்வதற்காக 24 மணிநேரமும் போராடுகின்றது.

நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் நம் உடல் நமக்காக வேலை செய்து கொண்டே இருக்கும்.

என்ன உணவுக்கு என்ன இரசாயனம் சுரக்க வேண்டும். எதை கொழுப்பாக மாற்ற வேண்டும். எதை இரத்தத்தில் இருந்து பிரிக்க வேண்டும் போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு செல்களிலும் உள்ளது.

நாம் உடலை பற்றி என்ன யோசித்தாலும் அதை உடனே நம் உடல் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.

 

உதாரணமாக நீங்கள் படுத்துக்கொண்டு, ஓடுவதாக கற்பனை செய்தால் உடனே உடல் அதை உண்மை என நம்பி அதற்கு தேவையான அனைத்து தசைகளையும் இயக்க ஆரம்பித்துவிடும்.

ஆம் உடலை மனதால் ஏமாற்றிவிடலாம். நீங்கள் நம்ப முடியாத ஒரு விடயத்தை இங்கே கூற போகிறேன்.

நீங்கள் தினமும் ஒரு அரைமணி நேரம் படுத்துக்கொண்டு, வெறும் கற்பனையால் யோகாசனம் செய்வதாக நினைத்தாலே போதும். நீங்கள் யோகா செய்தால் என்ன பலனோ அதே பலன் இதிலும் கிடைத்துவிடும்.

ஆம் சூரிய நமஸ்காரம் ஒவ்வொன்றாக செய்வதாக மனதில் ஆழ்ந்து நினைத்துவந்தாலே போதும்.

மனதிற்குள் புக முடிந்தால் உடலுக்குள்ளும் புக முடியும்

click me!