உங்களுக்குத் தெரியுமா? பழங்குடியினரின் உடல் வலிமைக்கு காரணம் “மூங்கில் அரிசி”

First Published May 6, 2017, 1:28 PM IST
Highlights
Benefits of bamboo rice


 

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன.

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது.

40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும்.

மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அந்தவருடம் வெள்ளாமை சரியாக இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது. உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தைப் பெருக்கும்.

மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குத்தான் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும்.

இதுதான் மூங்கில்பூத்தால் ஆகாது என்ற வழக்கு.

click me!