பல நோய் தீர்க்கும் வெண்டைக்காய் நீர்; ஆனா இந்த பக்க விளைவுகள் இருக்கு

Published : Jun 18, 2025, 04:26 PM ISTUpdated : Jun 18, 2025, 04:31 PM IST
Ladies finger

சுருக்கம்

வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காய்கறிகள் ஒவ்வொன்றும் சுவையை கொண்டிருப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களையும் கொண்டுள்ளன. அந்த லிஸ்டில் இருக்கும் காய்கறிகளில் ஒன்றுதான் வெண்டைக்காய். வெண்டைக்காய் வலுவலுப்பாக இருப்பதால் சிலர் இதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்திய சமையலறையில் அதிகம் சேர்க்கப்படும் காய்கறிகளில் இதுவும் ஒன்றாகும். இது எல்லா காலங்களிலும் கிடைக்கும். வெண்டைக்காயில் பல வகையான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.

வெண்டைக்காய் வலுவலுப்பாக இருந்தாலும் மிகவும் ஆரோக்கியமானது என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். அதுவும் குறிப்பாக வெண்டைக்காயில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற சிறந்த வழி எதுவென்றால் அவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த நீரை குடிப்பது தான் என்று நிபுணர்கள் பலரும் அறிவுறுத்துகின்றனர். தற்போது பெரும்பாலான மக்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதால் நிறைய பேர் வெண்டைக்காய் நீரை குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர்.

வெண்டைக்காயில் நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், மெக்னீசியம் வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சரி, இப்போது வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை யாரெல்லாம் குடிக்க கூடாது என்றும், வெண்டைக்காய் நீர் தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெண்டைக்காய் நீர் நன்மைகள்:

1. செரிமானத்தை மேம்படுத்தும் - வெண்டைக்காய் நீரில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்

2. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் - வெண்டைக்காய் நீரானது குளுக்கோஸ் புரிஞ்சுதலை மெதுவாக்குவதால் ரத்த சர்க்கரை மேலாண்மையை மேம்படுத்த பெரிதும் உதவும்.

3. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது - வெண்டைக்காய் நீரில் இருக்கும் ஆக்ஸிஜனேறிகள், நார்ச்சத்து கொழுப்பை குறைத்து இதய நோய் வராமல் தடுக்க உதவும்.

4. எலும்புகளை வலுப்படுத்தும் - கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே வெண்டைக்காயில் நிறைந்துள்ளதால், அவை எலும்புகளை வலுப்படுத்தும்.

5. எடை இழப்புக்கு உதவும் - வெண்டைக்காயில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் புரதம் வயிற்றை நீண்ட நேரம் திருப்தியாக வைக்கும். ஆகவே எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த நீர் சிறந்த பானமாகும்.

6. சரும ஆரோக்கியத்திற்கு நல்லது - வெண்டைக்காய் நீரில் இருக்கும் வைட்டமின்கள், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்சிஜனற்றிகள் சரும பளபளப்பை மேம்படுத்தவும், சருமத்தை நீரேற்றமாக வைக்கவும், வயதான தோற்றத்தை எதிர்த்து போராடவும், முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை போக்கவும் பெரிதும் உதவுகின்றது.

வெண்டைக்காய் நீர் பக்க விளைவுகள்:

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் - வெண்டைக்காய் நீரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் ஒரு சிலருக்கு இது வாயு, வயிற்று வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வாமை உள்ளவர்கள் - வெண்டைக்காய் ஒரு சிலருக்கு வெண்டைக்காயை ஏற்படுத்தும். எனவே அத்தகையவர்கள் வெண்டைக்காய் நீர் குடிக்க வேண்டாம்.

பிரக்டான்ஸ் - வெண்டைக்காயில் அதிக அளவு பிராக்டோஸ் உள்ளதால் ஒரு சிலருக்கு இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சிறுநீரக கற்கள் - வெண்டைக்காயில் இருக்கும் அக்சலேட்டுகள், சிறுநீரக கற்களை உருவாக்கும். எனவே சிறுநீரக அது பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

வெண்டைக்காய் நீர் தயாரிக்கும் முறை:

முதலில், 5 வெண்டைக்காயின் உன்னைப் பகுதியில் நீக்கிவிட்டு அதை கீறி விடுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வெண்டைக்காயை இரவு முழுவதும் ஊத வையுங்கள். பிறகு மறுநாள் காலை வெண்டைக்காயை நீக்கி விட்டு அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு :

- நீங்கள் முதன் முதலாக வெண்டைக்காய் நீர் குடிக்க போகிறீர்கள் என்றால் முதலில் சிறிய அளவிலிருந்து தொடங்குங்கள்.

- வெண்டைக்காய் நீரை குடிக்கும் போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனே குடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

- வெண்டைக்காய் நீரை உங்களது அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?