அழகுக்கு முகத்தில் போடும் கற்றாழையை, சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Feb 17, 2017, 01:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
அழகுக்கு முகத்தில் போடும் கற்றாழையை, சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா?

சுருக்கம்

முகத்தை அழகுபடுத்த கற்றாழை பயன்படுத்துகின்றனர். ஆனால், கற்றாழையை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கற்றாழையை பொதுவாக “அழுத்த எதிர்ப்பி” என அழைக்கிறோம். இது உடலை தேவைக்கேற்றபடி மாற்றியமைக்கிறது.

இவை இயற்கையிலே இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் போன்ற பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது.

உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாலை உதவுகிறது.

கற்றாழைச் சாறு போதையை நீக்க செயலாக செயல்படுகிறது.

தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழையை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும்.

தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும்.

கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.

இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும்.

வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது.

வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் சாப்பிட்டால் சூட்டு நோய்கள் தீரும். ஆண்மை நீடிக்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!