உங்களது உடலைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை…

 
Published : Feb 17, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
உங்களது உடலைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை…

சுருக்கம்

அ. உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்துக் கொள்வது மூலம் அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு காணலாம். அதாவது, அசிடிட்டிக்கான மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொண்டு சரியான நேரத்தில் சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் அசிடிட்டியிலிருந்து விடுபடலாம்.

ஆ. பித்த வாந்தி என்று ஒன்று கிடையாது. பித்த நீரானது கல்லீரலில் சுரந்து பித்தநாளத்தின் வழியாக டியோடினம் என்னும் சிறுகுடலை சென்றடைந்து உணவை செரிப்பதற்கு கீழே வந்துவிடுகிறது. எனவே பித்தநீரானது மேலே வராது.

இ. இளம் வயதில் ஓடி ஆடுவதால் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். எனவே எளிதில் ஜீரணமாகும். எனவே தான் கல்லையும் செரிக்கும் வயது என்று சொல்கிறார்கள். அதற்காக கல்லை சாப்பிட்டுவிடாதீர்கள்.

ஈ. எந்த ஒரு பொருளும் வயிற்றுக்குள் சென்றால் அது குறைந்தது 24 மணி நேரம், அதிகபட்சம் 48 மணி நேரத்தில் மலத்தின் வழியாக வெளியே வந்துவிடும்.

உ. 65 வயதானவருக்கு சுகர், பிரஷர், ஹார்ட் பிராப்ளம் உள்ளதால் திட உணவு செரிமானம் ஆவதில்லை. பழச்சாறு சுகரை அதிகப்படுத்தும் என்கிறார் மருத்துவர். இனி எந்த வகையான உணவு எடுக்கலாம் என யோசிப்பவர்கள் வேகவைத்த காய்கறிகள், காய்கறி சூப், பருப்பு, சப்பாத்தி போன்றவை சாப்பிடலாம். குறிப்பாக மண்ணிற்கு கீழே விளையும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.

எ. கல்லீரலானது பித்த நீரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக டியோடினம் என்னும் சிறுகுடலுக்கு அனுப்பி உண்ணும் உணவை செரிக்க செய்ய உதவுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்தை உறிஞ்சி உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது.

கணையமானது இன்சுலினை சுரந்து நம் உடலுக்குத்தேவையான சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

ஏ. கர்ப்ப காலத்தில் விரைவில் உணவு செரிமானம் ஆகாது ஏன் தெரியுமா? கர்ப்ப காலத்தில் உணவு சாதாரணமாக செரிமானமாகும். ஆனால் உணவு முக்கால் வயிற்றுக்குத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றினுள் குழந்தை உள்ளதால் அதிகமாக உண்ணும்போது குடல் மேல் நோக்கித் தள்ளப்படும்.

PREV
click me!

Recommended Stories

Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்