சைனசை குணப்படுத்தும் தும்பை இலை...

First Published Dec 10, 2016, 1:49 PM IST
Highlights


தும்பை செடியை நாம் அன்றாடம் சாலை யோரங்களிலும், நடைபாதைகளிலும் காணலாம்.

வெள்ளை நிறத்தில் சிறிய பூக்களை பூக்கும். இந்த செடியின் பூ, இலை என அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது.

சைனசை குணப்படுத்தும் புகையை தயாரிக்க தேவையான பொருட்கள் தும்பை இலை.

மஞ்சள் பொடி. சாம்பிராணி போடுவதற்கான கரண்டியில் மிகவும் பாதுகாப்பான முறையில் தணலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நெருப்பு புகையிடும் வகையில் சாம்பிராணியை போட வேண்டும். அத்துடன் அந்த தணலில் சிறிதளவு தும்பை இலை மற்றும் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை போட வேண்டும். இந்த புகையை தலைக்கு போடும் போது தலையில் ஏற்பட்டுள்ள நீர் கோர்ப்பு, சைனஸ் பிரச்னைகள் ஆகியவற்றில் இருந்து நாம் நிவாரணம் பெறலாம்.

இவ்வாறு புகையை கூந்தலுக்கு போடும் போது, தணல் இருக்கும் கரண்டி மீது ஒரு அலுமினிய சல்லடையை கவிழ்த்து அதன் மீது கூந்தலை காட்டுவதால் நெருப்பால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக புகையை பிடிக்க முடியும்.

மேலும் இந்த புகையை சுவாசிப்பதால் மூக்கடைப்பு, தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்னைகளில் இருந்து நீங்கி சுகம் காணலாம்.

மேலும் தும்பை இலை மற்றும் மஞ்சள் கலந்த இந்த புகையானது உடலுக்கு மட்டுமின்றி, நமது வீட்டை சுற்றியுள்ள உடலை பாதிக்கக் கூடிய டைபாய்டு, மலேரியா, யானைக்கால் போன்ற நுண் கிருமிகளையும் அழித்து சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் இந்த நோய் கிருமிகளை பரப்பக் கூடிய கொசு, ஈ தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கும் இது உதவுகிறது. அவற்றை தும்பை-மஞ்சள் புகை விரட்டி அடிப்பதால் நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.

அதே போல் நொச்சி மற்றும் பேய் விரட்டி இலைகளை இதே போல் பயன்படுத்தி புகையிடுவதன் மூலம் கொசுத் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

நொச்சி மிகச் சிறந்த கொசு விரட்டியாக செயல்படுகிறது. இந்த செடியை நாம் வளர்ப்பதன் மூலமும், அதன் இலைகளை புகையிடுவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள கொசுக்களை விரட்டி அடிக்க முடியும்.

இதனால் கொசுக்கள் மூலமாக பரவும் நோயில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

அதேபோல் வேப்பிலை, மாவிலை மற்றும் நிலவேம்பு இலை ஆகியவற்றை பயன்படுத்தி புகையிடுவதன் மூலம் பல்வேறு மருத்துவ குணங்களை நாம் பெற முடியும்.

இந்த மூன்று இலைகளையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். புதியதாக கிடைக்காத பட்சத்தில், கிடைக்கும் காலத்தில் இவற்றை காய வைத்து எடுத்துக் கொண்டு பொடி செய்து மூன்றையும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

இதை சாம்பிராணி பொடி போல பயன்படுத்தி புகை போடலாம். பாதுகாப்பான கரண்டியில் எடுக்கப்பட்ட தணலில் இந்த மூன்றையும் கலந்தும், சிறிது சாம்பிராணி கலந்தும் இந்த புகையை தயார் செய்யலாம்.

வேப்பிலை நோய் கிருமிகளை அழிக்கக் கூடியதாக இருக்கிறது. மாவிலை பூஞ்சைகள், பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாக விளங்குகிறது.

click me!