Joint Pain : கொடச்சல் கொடுக்கும் மூட்டு வலி! நிமிடத்தில் நிவாரணம் தரும் ஆயுர்வேத டிப்ஸ்!

Published : Oct 03, 2025, 10:41 AM IST
Ayurvedic treatment for joint pain

சுருக்கம்

மூட்டு வலியை குறைக்க உதவும் சில ஆயுர்வேதத்தில் குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

மூட்டு வலி பிரச்சினை தற்போது குழந்தைகள் மற்றும் டீனேஜர்களிடையே பொதுவாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை தான். ஆம், இன்றைய ஸ்பீடான காலத்தில் பெரும்பாலான மக்கள் குறைவான உடற்பயிற்சி செய்கிறார்கள் மற்றும் காலை சூரிய ஒளியில் குறைவாக தான் இருக்கிறார்கள். இதன் காரணமாக உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு, இளம் வயதிலேயே மூட்டு வலியை ஏற்படுகிறது.

இது தவிர உடலில் பித்த தோஷம் அதிகமாக இருந்தால் மூட்டு வலியை ஏற்படுத்தும். எனவே மூட்டு வலியை குறைக்க உடலில் இருக்கும் அதிகப்படியான வாதத்தை அகற்றுவது மிகவும் அவசியம். இதில் மன அழுத்தம் பதட்டம் ஆகியவையும் அடங்கும். ஏனெனில் இவைதான் உடலில் வாத தோஷத்தை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலையில் மூட்டு வலியை குறைக்க ஆயுர்வேதத்தில் சில குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அவை என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

மூட்டு வலியை குறைக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள் :

1. இந்த உணவுகள் டேஞ்சர்!

மூட்டு வலியை குறைக்க முயற்சிப்பவர்கள் அதிக புளிப்பு, அதிக காரம் மற்றும் அதிக புளித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றிற்கு பதிலாக சீரான உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள் அவை மூட்டு வலியை குறைக்க உதவும்.

2. ஆரோக்கியமான வாழ்க்கை முறை :

ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுதல், அதிகப்படியான உடற்பயிற்சி செய்தல் இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை ஆகியவை உடல் வலியை அதிகரிப்பது மட்டுமில்லாமல், மூட்டு வலியையும் ஏற்படுத்தும். ஆகவே இந்த வாழ்க்கை முறை குறைபாடுகளை சரி செய்வதன் மூலம் மூட்டு வலியிலிருந்து குணமடையலாம்.

3. ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுதல் :

நெய், எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளதாக ஆயுர்வேதம் சொல்லுகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மூட்டுகளில் வலியை குறைத்து, ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.

4. எண்ணெய் மசாஜ் :

மசாஜ் மூட்டு வலியை போக்க உதவும் சிறந்த வழியாகும். இதற்கு எள் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை மூட்டுகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் மூட்டுவலி போக்கலாம். ஆனால் கீழ் வாத நோயாளிகளுக்கு இந்த டிப்ஸ் பரிந்துரைக்கப்படவில்லை.

5. ஆயுர்வேத மூலிகைகள் :

அஸ்வகந்தா, மஞ்சள், இஞ்சி போன்ற மூலிகைகள் மூட்டு வலியை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆயுர்வேதம் சொல்லுகின்றது. இந்த மூலிகைகள் அனைத்தும் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றாலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு மருந்துகள் மற்றும் எண்ணெயை நீங்களே எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு முறை மருத்துவரை அணுகிய பிறகு பயன்படுத்தவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்
Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!