
உயிர்க்கொல்லி ஜிகா நோய்கிருமியை எதிர்த்து போராடுவதற்காக மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை பிரசில் நாட்டு அரசு ஆய்வகங்களில் உருவாக்கி வருகிறது.
Aedes aegypti என்ற வகை கொசுவே உயிர்க்கொல்லி ஜிகா நோய்கிருமியை மனித உடம்பிற்குள் செலுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஜிகா நோய்கிருமியை ஒழிக்க அனைத்து நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக போராடிவரும் நிலையில், இதற்கான தீர்வு காணப்படவில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
பிரசில் நாட்டில் ஜிகா நோய்கிருமியின் பாதிப்பால் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஜிகா வைரஸை ஒழிக்க மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உருவாக்கும் முயற்சியை பிரசில் அரசு மேற்கொண்டுள்ளது.
ஒருவாரத்திற்கு 60 மில்லியன் மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்களை உருவாக்குவது என பிரசில் அரசு முடிவு செய்துள்ளது.