ஓமம் டீ அருந்துங்க; இந்த பிரச்சனைகளைப் போக்குங்க…

Asianet News Tamil  
Published : Feb 15, 2017, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஓமம் டீ அருந்துங்க; இந்த பிரச்சனைகளைப் போக்குங்க…

சுருக்கம்

தேவையான பொருட்கள்:

கிரீன் டீ – ஒரு டீஸ்பூன்,
ஓமம் – கால் டீஸ்பூன்,
பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் 2 தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கிரீன் டீயுடன் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். 1 கப்பாக சுண்டும் வரை கொதிக்க விடவும்.

* சாறு இறங்கியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்:

1.. வைட்டமின்கள், ஏ, கே, இ, சி, ஃபோலிக் அமிலம், செலீனியம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன.

2.. ஃபோலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.

3.. செரிமானத்தை மேம்படுத்தும்.

4.. நுரையீரல் அழற்சியைப் போக்கும்.

5.. சளி, இருமலைத் தடுக்கும்.

6.. தொண்டைப் புண்ணைக் குணமாக்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!