
கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாக பிரிக்கலாம். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற தன்மைகளை கொண்டது. மருத்துவ பயன்பாட்டிற்காக இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு போன்ற அனைத்தும் உபயோகிக்கப்படுகின்றன.
கோவை இலையின் மருத்துவ குணங்கள்…
1.. கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.
2.. கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும்.
3.. கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாக காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.
4.. கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.
5.. இன்றையக் காலக்கட்டத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களில் கனணி முக்கிய பங்கு வகிப்பதால் கண்கள் மிகவும் சோர்வடைந்து அதன் நரம்புகள் பாதிக்கப்படுகின்றது. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதுடன் கண் நரம்புகளும் வலிமை பெறும்.
6.. மக்களை அவதிக்குள்ளாக்கும் சொரி, சிரங்கு போன்ற பல்வேறு விதமான தோல் வியாதிகளை குணப்படுத்த கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை ஆகிய நான்கையும் சம அளவு எடுத்து ஒன்றாக அரைத்து, சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின், உடலெங்கும் பூசி ,ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
7.. கோவை இலைச்சாறுடன் வெண்ணெயை சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.
8.. வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக் கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.