நிறைய பிரச்சனைகள், ஒரே தைலம் - நீங்களே செய்து வலியைப் போக்கிக் கொள்ளலாம்...

 
Published : Jan 17, 2018, 02:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
நிறைய பிரச்சனைகள், ஒரே தைலம் - நீங்களே செய்து வலியைப் போக்கிக் கொள்ளலாம்...

சுருக்கம்

A lot of problems the same balm - you can make yourself feel pain ..

நிறைய வலி நிறைந்த பிரச்சனைகளைப் போக்கும் தைலம்

செய்முறை 

சித்த மருத்துவத்தில் வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு தைலம் செய்யும் முறை.

தேவையானவை 

புதினா உப்பு

ஓம உப்பு

கட்டி கற்பூரம்

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும். இப்பொழுது தைலம் தயார்.

** இது மிகவும் வீரியமான தைலம். உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.

** இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.

** பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.

** இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

** கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.

** சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.

பின் குறிப்பு

இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!