உங்களுக்குத் தெரியுமா? புற்றுநோயின் உயிரணுக்களை அழிப்பதில் மிளகாய் விதைக்கு முக்கிய பங்கு உண்டு..

Asianet News Tamil  
Published : Jan 16, 2018, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
உங்களுக்குத் தெரியுமா? புற்றுநோயின் உயிரணுக்களை அழிப்பதில் மிளகாய் விதைக்கு முக்கிய பங்கு உண்டு..

சுருக்கம்

these food are helping to cure cancer cells

 

புற்றுநோயைக் குணப்படுத்தும் மிகச் சிறந்த வீட்டு மருந்துவப் பொருட்கள:

** மஞ்சள்:  

புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறதாம்.

** பெருஞ்சீரகம்:  

பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் எனும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களின் புற்றுநோய் பிசின் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைக்கிறது. வறுக்கப்பட்ட பெருஞ்சீரகத்தூள் சேர்க்கப்பட்ட தக்காளி சூப் புற்றுநோய் நோயாளிகளுக்கான உணவாகும்.

** குங்குமப்பூ:  

இயற்கையான காரடெனாய்டு டை கார்போசிலிக் அமிலம் எனப்படும் குரோசிடின் குங்குமப்பூவில் அதிகமாக காணப்படுகிறது. புற்றுநோய்க்கு குட்பை சொல்லும் சக்தி குங்குமப்பூவிற்கு உண்டு.

** சீரகம்:  

ஜீரண சக்திக்கு உதவுகின்ற சீரகத்தில் உள்ள, ‘தைமோகுயினோன்’ என்கின்ற மூலப்பொருள் புற்றுநோய்க்கு மருந்தாகவும் பயன்படுகின்றது.

** இலவங்கப்பட்டை:  

தினமும் அரைகரண்டி லவங்கத்தூளை எடுத்துக்கொண்டால், புற்றுநோய் அபாயங்களிலிருந்து நம்மை நிச்சயம் தற்காத்து கொள்ளலாம். இயற்கையாகவே உணவை கெட்டுப் போகவிடாமல் காக்கும் இதில் கூடுதலாக அயர்ன்னும், கால்சியமும் உள்ளது.

** மிளகாய் விதைகள்:  

இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கான பலனை, ஒரு ஸ்பூன் மிளகாய் விதைகள் தந்து விடுகின்றது. இதில் உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுநோயின் உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக பயன்படுகிறது.

** மிளகு:  

லுகீமியாவின் செல்களை அழிப்பதிலும், குறைப்பதிலும் மிளகின் பங்கு இன்றியமையாதது. நோய்க்கிருமிகளுக்கு மிளகைப் பார்த்தால் கொஞ்சம் பயம் தான். எதிரி வீட்டுக்கு போனாலும் 3 மிளகை சாப்பிட்டால், விஷம் கூட முறிந்து விடும்னு சொல்லுவாங்க.

** இஞ்சி:  

கொழுப்பை குறைப்பதிலும், உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதிலும், புற்றுநோய் கிருமிகளை அழிப்பதிலும் சிறந்த மருந்தாக இஞ்சி செயல்படுகின்றது.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake