Weight Loss : உடல் எடையை குறைக்க உறுதுணை செய்யும் 5 குறைந்த கலோரி கொண்ட பழங்கள்..!!

By Dinesh TG  |  First Published Oct 18, 2022, 11:40 PM IST

கொழுப்பை கரைக்க உதவும் டாப் பழங்கள் குறித்து விபரங்கள் அறிவியல்பூர்வமான தகவல்களுடன் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கர்ப்பகாலத்துக்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கான பழங்கள் குறித்த தகவல்களும் இங்கு வழங்கப்பட்டுள்ளன.
 


உடல் எடையை குறைக்கும் போது, வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர, நாம் என்ன சாப்பிடுகிறோம் அல்லது என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு அற்புதமான வழியாகும். இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு பழ வகைகள் கலோரிகளில் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. இதுபோன்ற பழங்களை சாப்பிடுவதால் அது நம் வயிறை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். எனவே, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு அல்லது உணவுக்கு இடையில் என எந்த நேரத்திலும் பழங்களை சாப்பிடலாம். எடை இழப்பு பயணத்திற்கு உதவும் கொழுப்பை குறைக்கக்கூடிய சிறந்த பழங்கள் குறித்த விபரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

அவகேடோ

Tap to resize

Latest Videos

இந்த பட்டியலில் முதன்மையுள்ள பழம் அவகேடோ. அதிகளவில் நல்ல கொழுப்புச் சத்து நிறைந்துள்ள இந்த பழத்தை  சாப்பிடும் போது, உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்புகள் வெளியேறிவிடும். இதிலுள்ள கொழுப்பு எடை இழப்புக்கு உதவும் சில ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இதை சாப்பிடுவதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். அதனால் ஆரோக்கியமற்ற வகையில் ஏற்படும் உணவுப் பசியைத் தடுக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இடம்பெற்றுள்ளன. இது காலையில் சாப்பிடுவதற்கு நல்ல சிற்றுண்டியாகை இருக்கும். ஒரு ஆப்பிள் சாப்பிட்டாலே நமக்கு வயிறு நிரம்பிவிட்ட உணர்வு வந்துவிடும். இதன்மூலம் ஆப்பிள்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதிலிருந்து நம்மை விலக்கி வைக்கிறது. நமது உணவுப் பழக்கத்தில் ஆப்பிளை கொண்டு வருவதன் மூலம், உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும்.

Dragon Fruit : டிராகன் பழம் குறித்து நீங்கள் அறிந்திராத முக்கியமான 5 விஷயங்கள்..!!

நாவல் 

இந்தியாவில் எண்ணற்ற நாவல் வகைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே மனிதனுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் விதமாகவே படைக்கப்பட்டுள்ளன. இதை சாப்பிடுவதால் இனிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என்கிற பசி குறைகிறது. கூடுதலாக, இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. இதனால் எளிமையாக உடலில் இருக்கும் கலோரிகளை நாவல் பழங்கள் சாப்பிடுவதால் கரைக்க முடியும்.

திராட்சை

திராட்சைப் பழங்கள் சாப்பிடுவதன் மூலம், விரைந்து உடல் எடை குறைவதாக சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பழத்தில் இருக்கும் கொழுப்பை எரிக்கும் என்சைம்கள், உடல் எடையைக் குறைக்கும் ஒரு சூப்பர் உணவாக அமைகிறது. மேலும், இந்த பழத்தை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. திராட்சைப்பழத்தில் உள்ள அதிக நீர், உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது. 

பப்பாளி

பப்பாளியில் பப்பைன் என்கிற என்சைம் உள்ளது. இது உடலிலுள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. எனவே, எடை இழப்புக்கு பப்பாளி மிகவும் சிறந்த பழமாகும். இது வீக்கம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்க உதவுகிறது. பப்பாளியை வெறும் வாயில் சாப்பிடுவதை விடவும், அதை சாலட் அல்லது ஸ்மூதி செய்து சாப்பிடுவது பல்வேறு வகையில் நன்மை தரும்.

Makhana : பாலுணர்வு முதல் இருதய நலன் வரை- தாமரை விதைகளில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!!

மாதுளை

இந்த பழத்தில் உள்ள பாலிஃபீனால்கள், வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. அதனால் இதை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம், உடல் எடை விரைவாக குறையும். தினமும் காலை உணவாக ஒரு கிளாஸ் மாதுளை சாறு குடிக்க வேண்டும். மதிய உணவுக்கு முன் தயிருடன் இதை சாலடாக செய்து சாப்பிடலாம். ஆனால் இதை சக்கரையுடன் மட்டும் சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்போது எந்தவிதமான பலனும் கிடைக்காது.
 

click me!