
1. காலை மாலை நடைப் பயிற்சி செய்யவும்.
2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல் நல்லது.
3. பகல் தூங்காதிருத்தல் வேண்டும்.
4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
5. இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ண வேண்டும்.
6. இரவு நீர் அதிகம் பருக கூடாது.
7. புடலை, துவரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்; அசைவ உணவு வகைகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
8. புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ண வேண்டும்.
9. கோடம்புளி என்னும் பழம்புளியை உணவில் பயன்படுத்தல் அல்லது கஷாயமாக்கி குடிக்க வேண்டும்.
10. அமுக்கிராச் சூரணம், நவகக்குக்குலு, பூண்டு லேகியம், கொள்ளுக்குடிநீர், மண்டூராதிக் குடிநீர் முதலிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் உட்கொள்ள வேண்டும்.