நீளமாக தாடி வளர்ப்பது இப்போது ட்ரெண்ட். ஆனால் தாடி இருக்கும் போது முத்தம் கொடுத்தால் அது பெண்களுக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது. அது உண்மையா?
இன்றைய ட்ரெண்ட் நீளமாக தாடி வளர்ப்பது. ஃபேஷன் என்ற பெயரில் பலர் தாடி வளர்க்கிறார்கள். குளிர்காலம் வந்தாலும் கூட சிலர் ஷேவிங் கூட செய்ய விரும்பவில்லை. ஆண்களின் இந்த ஸ்டைல் அல்லது சோம்பேறித்தனம் அவர்களின் அழகை இன்னும் மேம்படுத்துகிறது என்று சொல்லலாம். ஆனால், அவர்களின் துணைக்கு இது நல்லதல்ல. ஷேவ் செய்யாமல் உங்கள் துணையிடம் சென்றால், அவர் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் அவளுக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக, ஆண்களின் தாடி பெண்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தாடியில் பல ஆபத்தான பாக்டீரியாக்கள் மறைந்துள்ளன. நீங்கள் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொள்ளும்போது, உங்கள் முகத்தால் அவள் முகத்தைத் தொடும்போது அவள் முகத்தில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. தோல் உரிக்கப்படலாம் அல்லது தொற்று அபாயத்தை அதிகரிக்க செய்யலாம்.
இதையும் படிங்க: கொரியர்கள் ஏன் எப்போதும் மொழு மொழுன்னு இருக்காங்க.. தாடி வளராதா? காரணம் இதோ..!!
அடர்ந்த தாடியுடன் இருக்கும் ஆணுக்கு முத்தம் கொடுக்கும் பெண்ணுக்கு 'இம்பெட்டிகோ' நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் தொற்றக்கூடியது. இது வந்தால், தோலில் சிவப்பு தடிப்புகள் தோன்றும். இது ஒரு தீவிரமான பிரச்சனை அல்ல. இருப்பினும், இது பெண்களுக்கு எரிச்சலை தூண்டும். ஆண்டிபயாடிக் கிரீம் அல்லது மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இம்பெடிகோவை குணப்படுத்த முடியும். சில நேரங்களில் அது உங்களுக்கு தீவிரமான தன்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: லிப் லாக்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!
அதுமட்டுமின்றி, உடலுறவின் போது தாடியும் மீசையும் பெண்களுக்கு எரிச்சலை தூண்டும். மேலும், இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்தை உணருகின்றனர். குறிப்பாக உடலுறவின் ஈடுபடும் போது ஆண்கள் பெண்களுக்கு முத்தம் கொடுக்கும் போது தாடி குத்திவிட்டால் பெண்களின் மனநிலை மாறிவிடும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கோடையில் தாடியை வெட்டுவது போல,குளிர்காலத்திலும் தாடியை வெட்டுங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தாடி குறித்தும் நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. தாடி இல்லாமால் இருப்பவர்களை விட,
தாடி வைத்தவர்கள் தூய்மையானவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் தாடி இருக்கும் போது முகத்தின் தோலை நேரடியாக தொட முடியாது. தாடியை அழகாக வைத்திருக்க, ஆண்கள் அதற்கு சில க்ரீம் தடவுவது மட்டுமின்றி, அதை சுத்தமாக வைத்திருப்பதிலும் அதிக கவனம் செலுத்துவார்கள்.
ஆனால் மற்றொரு ஆய்வில், தாடி வைத்த ஆண்களிடம் இருந்து பெண்கள் ஓடுவதாகத் தகவல் வந்துள்ளது. தாடி வைத்த ஆண் கோபத்துடனும் திமிர்பிடித்தவனாகவும் தோன்றுவதாக ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சொல்லப் போனால் சில விசேஷ சமயங்களில், இந்த தாடி தடையாக இருப்பதாக சில பெண்கள் கூறுகின்றனர். இதனால் தன் துணையை சரியாகக் கூட முத்தமிட முடியவில்லை என்கின்றனர். சில பெண்கள் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட பையனை "மிஸ்டர் கிளீன்" என்று நம்புகிறார்கள்.
தாடியை எப்படி சுத்தம் செய்வது? :
தாடி பிடிக்கும் ஆண்கள் சுத்தமாக ஷேவ் செய்வதை விரும்ப மாட்டார்கள். குளிர்காலமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி, தாடி வைக்க விரும்புபவர்கள். மேலும் அதை சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். மேலும் நீங்கள் உங்கள் தாடியை அழகான வடிவத்தில் வைக்கலாம். அவ்வப்போது, ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யுங்கள் மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தலாம். குறிப்பாக, தாடி தொடர்பான பல பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, தாடியை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால், உங்கள் துணைக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.